கட்டுரை
சகலக் காலத்துக்குமான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ்

சகலக் காலத்துக்குமான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் காலமான தினமின்று🥲
கடந்த 1,000 ஆண்டுகளில் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர், உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை ஓங்கி ஒலித்த குரல், பொருளாதார மாமேதை, காலம் கடந்தும் அரசியல் தளங்களில் உச்சரிக்கும் பெயர்: கார்ல் மார்க்ஸ்.
ஆம்.. முதலாளிகளின் பிடியில் சிக்கி, அவர்களின் பேராசைக்கு இரையாக காலங்காலமாய் சுரண்டலுக்கு உள்ளாகி, பசி, வறுமை, போராட்டம் ஆகியவற்றை மட்டுமே வாழ்நாள் முழுவதும் அனுபவித்துவந்த பாட்டாளி வர்க்கத்தினருக்கு விடி வெள்ளியாய்த் தோன்றிய அசாதாரண சிந்தனையாளர்தான் கார்ல் மார்க்ஸ்.