இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம்

இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம்
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் “இந்திய ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்” ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில்(மார்ச்-18) கொண்டாடப்படுகிறது.
இந்திய நாட்டின் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படைக்கு தேவையான நவீன பாதுகாப்பு சாதனங்களை நாடு முழுவதும் உள்ள 41 ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பாதுகாப்பு சாதன போர்க்கருவிகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி, சோதனை என்று நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் செயல்படக்கூடிய ஒரு விரிவான தயாரிப்பு அமைப்பாக செயல்படுகிறது. உலகில் ஒரு அரசால் இயக்கப்படும் பாதுகாப்பு சாதன தொழிற்சாலையில் இது மிகப் பெரியது ஆகும்.
இந்தியா ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது அவர்களின் வர்த்தகம் மற்றும் அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு ஆயுத தளவாட உற்பத்தி அவசியத்தை உணர்ந்து முதன் முதலாக கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் ராணுவக் குழு அமைக்கப்பட்டது. இதுவே தற்போதைய இந்திய பாதுகாப்பு உற்பத்தி சாதன தொழிற்சாலைகளுக்கு ஆரம்பமாக அமைந்தது