கட்டுரை

தோழர்:EMS அவர்கள் நினைவு நாள்

இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தார் நம்மிடையே……

1965ம் ஆண்டில் ஒரு நாள்…

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின்,

நீண்ட திண்ணையில், நடந்து வந்து கொண்டிருந்தார், புகழ்பெற்ற மக்கள் மருத்துவர்,Dr.P.K.R.வாரியார் அவர்கள்.. அப்போது, நோயாளிகளுக்கிடையே,

ஒரு நடுத்தர வயது தம்பதியர் இருப்பதை கவனித்தார், Dr.வாரியார்… தனது கண்களை நம்ப முடியவில்லை அவரால்…. மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார் அவர்..

ஆமாம்…..

அவர்கள் வேறு யாரும் இல்லை…

Dr.வாரியார் அவர்கள் சந்தேகப்பட்டது சரியே.

அங்கே… அந்த திண்ணையில் இருந்தவர்கள்,

மார்க்சீய அறிஞரும், உலக வரலாற்றில்,

முதன்முறையாக, தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட, கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர், மக்களின் தோழருமான தோழர்:ஈ. எம். எஸ். அவர்களும், அவரது மனைவியாரும் தான்.. அவர்கள் அருகில் ஒரு சோற்று பாத்திரமும்

இருந்தது…

Dr.வாரியார் அவர்கள், ஓடிச்சென்று, தோழரிடம் சென்று, என்ன ஏது என்று விசாரித்த போது, தங்களது மகன், அனியன் என்ற EM.ஶ்ரீதரனுக்கு, ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அதற்காக

மருத்துவ மனைக்கு வந்திருப்பதாகவும்

தெரிவித்தார் தோழர்:ஈ. எம். எஸ்…

கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வருக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவதற்கு தயாராக இருப்பதாக,Dr.வாரியார் தோழரிடம் கூறினார்…

ஆனால், அதை மிகவும் நாகரீகமாக, மறுத்து விட்டார் தோழர்:ஈ. எம். எஸ் என்ற எளிய தோழர்! பண்பட்ட, தொழிலாளி வர்க்க பண் பாடு………..!

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு,Dr.வாரியார் ஈ. எம். எஸ். தம்பதியினரை தனது வீட்டுக்கு

உணவுக்கு வருமாறு அழைத்த போது,

தங்களிடம் இருந்த சோற்று பாத்திரத்தை

சுட்டி காட்டிய படி, தங்களது உணவை, தங்களது வீட்டிலிருந்து எடுத்து வந்துள்ளதாக கூறினார்

தோழர்:ஈ. எம். எஸ் என்ற எளிய தோழர்…

Dr.வாரியார், தனது வீட்டுக்கு சென்று உணவுக்கு பிறகு திரும்பி மருத்துவமனைக்கு வரும் போது, அதே திண்ணையில் அமர்ந்து,

தங்களது உணவை உண்டு கொண்டிருந்த, தோழர்:ஈ. எம். எஸ். அவர்களையும், அவரது

மனைவியையும், பிரமிப்பை அடக்க முடியாமல் கடந்து சென்று கொண்டிருந்தார்,Dr.வாரியார்…

இப்படியும் தலைவர்கள் இருந்தார்கள்….

*I.V.தாஸ் எழுதி, Kerala Bhasha Institute வெளியிட்ட”ஈ. எம். எஸ் வாழ்க்கையும்,

காலமும்”என்ற நூலில்,Dr.P.K.R.வாரியார்

எழுதிய ஒரு கட்டுரை…

ஏனோ, இன்று இதை எழுத வேண்டும் என்று

தோன்றியது……….

இன்று,(19-3-2023) தோழர்:EMS அவர்கள் நினைவு நாள் மட்டுமல்ல ஒரு நினைவூட்டலும்

கூட..

– ஹேமாவதி ஹேமாவதி ஹென்ஸ் முகநூல் பதிவு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button