கட்டுரை

நான்கு தூண்கள்

நான்கு தூண்கள்

சாவி என்னுடன் மிக நெருக்கமாகப் பழகியவர். எல்லா விஷயங்களையுமே என்னிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வார். உரிமையோடு தொடர்கதையை ஆரம்பிக்கச் சொல்லுவார். “இவ்வளவு தொகைதான் கொடுக்கமுடியும் ராஜேஷ்குமார். நீங்கள் எவ்வளவு வாரம் வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்” என்று சொல்லி, எனக்கு ‘சாவி’ பத்திரிகையில் வாராவாரம் 6 பக்கங்களை ஒதுக்கினார். ‘சாவி’ இல்லையென்றால் இந்த ‘ராஜேஷ்குமார்’ என்ற எழுத்தாளன் கண்டிப்பாக உருவாகியிருக்க மாட்டான். எஸ்.ஏ.பி. குமுதம் ஆறு லட்சம் பிரதி விற்பனையில் இருந்தபோது, அறிமுக எழுத்தாளரான என்னை குமுதத்தில் தொடர்கதை எழுதச் சொன்னார். நான் சற்றுத் தயங்கினேன். “உங்களால் எழுதமுடியும் ராஜேஷ்குமார். குமுதத்தில் ஆறு லட்சம் பிரதிகளில் ஒரு பிரதி உயர்ந்தால்கூட எனக்குச் சந்தோஷம். நீங்கள் எழுதுங்கள்” என்று சொன்னார்.

மணியன் மிகச்சிறந்த பண்பாளர். ஈகோ பார்க்காதவர். கோவை வந்ததும் நேரடியாக என் வீடு தேடி வந்து என்னைச் சந்தித்து, “அடுத்த மாத மணியன் இதழுக்கு ஒரு நாவல் வேண்டும் ராஜேஷ்குமார்” என்று உரிமையோடு கேட்ட அன்பு உள்ளத்தை மறக்கமுடியாது. விகடன் பாலசுப்பிரமணியன் என்னைச் சென்னைக்கு வரவழைத்து, “விகடனில் நீங்கள் ஒரு அருமையான தொடர் எழுத வேண்டும். ஏதாவது கதை இருக்கிறதா?” என்று கேட்டார். நான் ஒரு கதையைச் சொன்னேன். அவர், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டே, கண்மூடி கதையைக் கேட்டார். கதை சொல்லி முடித்ததும், ‘பேஷ்.. பேஷ். நல்லா இருக்கு. உடனே ஒரு தலைப்புச் சொல்லுங்கள்” என்று கேட்டு வாங்கி, அடுத்த வாரமே, தமிழகமெங்கும் தொடர்கதையின் தலைப்பை, போஸ்டர் அடித்து விளம்பரம் செய்து என்னைப் பெருமைப்படுத்தினார்.

பத்திரிகை உலகின் நான்கு தூண்கள் இவர்கள். எனது எழுத்துலக வளர்ச்சிக்கு உரம் போட்டவர்கள். இந்த நான்கு பேரையும் எப்போதும் நான் நினைவு கூர்கிறேன்.

ராஜேஷ்குமார்

நன்றி: தென்றல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button