கார்த்திகி கோன்சால்வ்ஸ்?

யார் இந்த கார்த்திகி கோன்சால்வ்ஸ்? நீலகிரியில் பிறந்த கார்த்திகி அங்கேயே தனது கல்லூரிப் படிப்பபையும் முடித்திருக்கிறார். கார்த்தகி அடிப்படையில் ஒரு புகைப்பட பத்திரிகையாளர். குறிப்பாக காட்டு விலங்குகள் சார்ந்து, சுற்றுச்சூழல் சார்ந்தும் அவர் இயங்கி வந்திருக்கிறார். டிஸ்கவரி சேனல் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார்.
இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் நீலகிரியில் கார்த்திகி ஒருமுறை யதேச்சையாக பொம்மனையும், அவரது யானை ரகுவையும் சந்தித்திருக்கிறார். இந்த யதேச்சையான சந்திப்புத்தான் ஆஸ்கர் வரை கார்த்தகியை கொண்டு சேர்த்துள்ளது. தி எலிபஃன்ட் விஸ்பரர்ஸ்தான் கார்த்திகியின் முதல் படம். இந்த ஆவணப் படத்தை முழுமையாக உருவாக்க கார்த்திகிக்கு 6 வருடங்கள் தேவைப்பட்டன.
ஆவணப் படம் உருவாக்கம் குறித்து கார்த்திகி கூறும்போது, “நான் பெரும்பாலும் வனப்பகுதியின் அருகில் வளர்ந்ததால் அதன் தன்மை எனக்கு நன்கு தெரியும். விலங்குகளும் எனக்கு புதிது அல்ல. ஆவணப் படம் என்பது முழுவதும் யதார்த்த நிகழ்வுகளின் அடிப்படையில் ஆனது. அதற்கு செட்கள், ஸ்கிரிப்ட் எல்லாம் தேவையில்லை. இம்மாதிரியான படைப்புகளுக்கு பொறுமையும், வேட்கையும் முக்கியம்” என்கிறார்.
தி எலஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்தை பிரபல தயாரிப்பாளரான குனீத் மோங்கா தயாரித்திருக்கிறார். இவ்வாறு பெண்கள் இருவர் சேர்ந்து இந்தியாவுக்கு ஆஸ்கரை பெற்று தந்திருக்கிறார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை