ஜேம்ஸ் வசந்தனுக்கு தெரியாதா என்ன

“இளையராஜா ஒரு முட்டாள்; பண்பற்றவர்; கேவலமானவர்; ஈனபுத்தி உள்ளவர்; மட்டமானவர்; அசிங்கமாக பேசுபவர்” என்றதோடு, ‘அவன், இவன்’ என்றும் ஏசியிருக்கிறார், ஜேம்ஸ் வசந்தன் (James Vasanthan)
தவிர, “இப்படி நான் சொல்வதால் என்னவிதமான எதிர்க்கருத்துகள் வரும் என்பதை அறிந்தே சொல்கிறேன்!” என்றும் சொல்லி இருக்கிறார்.
இதற்குக் காரணம், “ரமணர்தான் இறந்த பிறகு உயிர்த்தெழுந்தார். இயேசு அல்ல..” என இளையராஜா பேசியதுதான்.
பதிலுக்கு ஜேம்ஸ், “ரமணர் உயிர்த்தெழுந்தார் என்பதுதான் டுபாக்கூர்” என்கிறார்.
இரண்டு கதைகளுமே டுபாக்கூர் என்பதுதான், அறிவியலை நம்புவோர் கருத்து.
தவிர இளையராஜாவின் பல பேச்சுக்களை நாமும் கண்டித்து இருக்கிறோம். ஆனால் தரக்குறைவாக கருத்து தெரிவித்தது இல்லை.
அது போன்ற நேரங்களில் ஜேம்ஸ் வசந்தனும் இளையராஜாவின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.. மிகுந்த நாகரீகமான வார்த்தைகளில்!
ஆனால், மதம் என்று வந்ததுமே, நாகரீகம் காணாமல் போகிறது.. பக்தி வந்தால் புத்தி போச்சு என்று பெரியார் சொல்வது எத்தனை சரி! ( எந்த மத பக்தியாக இருந்தாலும்!)
ஜேம்ஸ் தமிழ்ப் பற்றாளர், நல்ல இசை அமைப்பாளர் என்று மகிழ்ந்தோம். ஆனால் அவருக்குள் இப்படியோர் மதவெறியாளன் இருப்பதை அறிந்து அதிர்ச்சி ஏற்படுகிறது.
‘எதிரிகளிடத்தும் அன்பு செய்’ என்று கிறிஸ்துவம் சொல்வதாக கூறுவார்கள்.
ஜேம்ஸ் வசந்தனுக்கு தெரியாதா என்ன?

- டி.வி.சோமு