ஆன்மீகம்

சேலம் கஞ்ச மலை ரகசியம்

சேலம் கஞ்ச மலை ரகசியம் 👇

கஞ்சமலையில் இருந்து எடுக்கப் பட்ட தங்கத்தைப் பயன்படுத்தித் தான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு (பராந்தக சோழனால்) பொன் கூரை வேயப்பட்டது .

அக்காலத்தில் கொங்கு நாடு என்பது சேலம் கஞ்சமலையினை மையமாக வைத்து கிழக்கே மதிற்கோட்டைக் கரையையும், மேற்கே கோவை வெள்ளியங் கிரியையும், வடக்கே பெரும் பாலையையும், தெற்கே பழநியையும் எல்லைகளாகக் கொண்ட கொங்கு மண்டலமாகும்.

சேலம், செவ்வாய்ப் பேட்டை, இராசிபுரம், குமாரபாளையம், அயோத்தியா பட்டணம் என எழுபத்தெட்டு நாடுகள் இதில் அடங்கும்.

பற்றறுத்தாளும் பரமன் ஆனந்தம் பயில்நடனஞ் செய் சிற்றம் பலத்தைப் பொன்னம்பலம் ஆகச் செய்ச் செறும் பொன் முற்றிலுந் தன்னகத்தே விளைவாவதை மொய்ம்பிறையுள் மற்றும் புகழக் கொடுத்ததன்றோகொங்கு மண்டலமே*

( கொங்கு மண்டலச்சதகம் – கார்மேகக் கவிஞர் )

இப்பாடல் மூலம் கஞ்சமலையில் தங்கம் கிடைத்தது உறுதியாகிறது. அதுமட்டுமன்றி மலையிலிருந்து ஒடிவரும் நீரில் ஆற்றில் பொன் (பொன் தாது) கிடைத்ததால் அதனைப் பொன் நதி பொன்னிநதி என்று பெயர்.

அந்நதியில் பொன் எடுத்தவர்கள் சமீபகாலம் வரை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தங்கம் மட்டும் அல்லாது கருமையான கஞ்சமலையில் கருநெல்லி, கரு நொச்சி, கரு ஊமத்தை, கருந் துளசி என பல் வேறு காய கல்ப மூலிகைகள் உள்ளன. கஞ்ச மலைக் காட்டினைக் கருங் காடு என்றே கூறுவர்.

அதியமான் அவ்வைக்கு தந்த கருநெல்லிக்கனி கஞ்சமலையில் விளைந்த கரு நெல்லிக்கனியே ஆகும்.

இந்த அதிய மான் ஆண்ட தலை நகரம் தான் தகடூர் ( இன்றைய தருமபுரி . சேலத்தின் அருகில் உள்ள ஊர் ) . இன்றும் தருமபுரி சேலம் சாலையில் அதியமான் கோட்டை என்ற ஊர் அதே பேரிலேயே உள்ளது …

அங்கே கோட்டையையும் இன்றும் காணலாம் . இங்கே அதிய மான் மன்னன் வணங்கிய கால பைரவர் கோவில் இன்றும் கூட மிக பிரசித்திமாக உள்ளது.

அஷ்டமி தினத்தன்று கோவில் கூட்டம் அலைமோதும் . இது சேலம் பெங்களூர் போகும் வழித்தடத்தில் உள்ளதால் கர்நாடகா மற்றும் பெங்களூரில் இருந்து ஏராளமான பேர் வருகின்றனர் . தேவே கவுடா அடிக்கடி இங்கு வருவது வழக்கம் .

கஞ்சமலையில் தங்கத்தாது கிடைத்துள்ளது. அம்மலையில் சித்தர்கள் இரச வாதம் செய்து உள்ளனர். சித்தர்களின் அருளாசி அங்கே இன்றும் பூரணமாக நிறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சேலம் பகுதி மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்கி சேமிக்கும் பழக்கம் உடையவர்கள் .. அதனால் இன்று சேலத்தில் பத்தடிக்கு ஒரு நகை கடையை காணலாம் . தங்க நகை கடைகள் சேலத்தில் அதிக அளவு பரவி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்

தங்கம் வேண்டுவோர் முழு நம்பிக்கையுடன் கஞ்சமலை சித்தரை வேண்டினால் கைதேர்ந்த இரச வாதியாகிய சித்தர் அருளால் தேவையான அளவு தங்கம் பெறலாம்.

பலரும் கொல்லி மலை, கல்வராயன் மலை, பர்வதமலை, பொதிகைமலை, சதுரகிரி என பல மலைகள் பற்றி கூறியுள்ளனர் ! ஆனால் கஞ்சமலை பற்றி யாரும் விரிவாக கூற வில்லை.

காலங்கி நாதரின் குரு பக்தியை திரு மூலர் கண்டது இந்தமலையில் தான்

அவ்வையாருக்கு அதிய மான் நெல்லி கனி கொடுத்ததும் இங்கு தான்,

அது விளைந்த இடமும் இங்கு தான் அங்கவை,சங்கவை திருமணம் நடந்ததும் அகத்தியர் இங்கிருந்து பொதிகைமலைக்கு சுரங்கம் மூலம் போனதாகவும், போகலாம் எனவும் அவரே சொல்கிறார்.

இங்கே கஞ்ச மலை அடி வாரத்தில், சேலம் புற நகர் பகுதியில் ஒளவைக்கு தனி சிலை உத்தம சோழபுரம் என்ற ஊரில் கரபுரநாதர் சிவன் கோவில் வாயிலில் இன்றும் உள்ளது !
சிவனும், பெருமாளும் சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளுள் இதுவும் ஒன்றாகும்.

சுலுமுனை சித்தர் குகை, அகத்தியர் குகை, காலங்கி குகை ஆகிய வைகளை உள்ளடக்கியது

சித்தர் பீடம், 77அடி உயரமுள்ள ஆஞ்சனேயர் சிலை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

கஞ்சமலை சித்தர் கஞ்சமலையில் பிறந்ததாக அறியப் படுகிறது. இவர் வாழ்நாள் முழுவதும் குகை யிலேயே கழித்ததாக அறியப்படுகிறார்.

💥இவர்அட்டமா சித்திகள் என்ற கலையில் காற்றில் பறக்கும் கலையை அறிந்தவர். இவர் மூலிகையையே ஆடையாக அணியும் பழக்கம் கொண்டவர். இவர் பறவை களுக்கு பிரியமானவர்.🙇‍♀️🙇‍♂️🌹🙏

Written & Compiled by
M.S.Ramesh- Salem
Mob – 8754780924

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button