கட்டுரை
கோவையில் தனியாருக்கு சொந்தமான பயணிகள் பேருந்தை இளம்பெண் ஒருவர் ஓட்டி அசத்தி வருகிறார்

கோவையில் தனியாருக்கு சொந்தமான பயணிகள் பேருந்தை இளம்பெண் ஒருவர் ஓட்டி அசத்தி வருகிறார்.
கோவை வடவள்ளி மகேஷ்-ஹேமா தம்பதியின் மகள் ஷர்மிளா. 24 வயது இளம்பெண் ஷர்மிளா பார்மசி டிப்ளமோ படித்துள்ளார்.
இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ள நிலையில், தந்தையின் ஓட்டுநர் தொழிலில் ஈக்கப்பட்டு தற்போது பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் ஆவதை லட்சியமாக கொண்டிருந்த ஷர்மிளா, ஓட்டுநர் உரிமம் பெற்று தற்போது பேருந்துகளை இயக்கி அசத்தி வருகிறார்.
காந்திபுரம் முதல் சோமனூர் வரைக்கும் செல்லும் பேருந்தினை, ஷர்மிளா இயக்கி வருவது பெண்களிடையே மகிழ்ச்சியையும், அதிகளவு வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.