எழுத்தாளர்கள் ஏன் பாராட்டப்படவேண்டியவர்கள்? காரணம், அவர்கள் அவர்களுக்காகச் சிந்திப்பதில்லை

நண்பர்களே… ஒரேயொரு சிறுகதைதான் உலகத்தில் உள்ள அத்தனை கதைகளையும் மாற்றியமைத்தது. இத்தனை கதைகள் உலகில் நிலவுவதற்கு அந்த ஒற்றைக் கதைதான் காரணம். ஓய்வுபெற்ற ராணுவ வீரன் ஒருவன், தபால் இலாக்காவில் அமர்ந்துகொண்டு எழுத முடியாதவர்களுக்கும் எழுதத் தெரியாதவர்களுக்கும் தபால் எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பான். அதன் மூலம் கிடைக்கும் தொகையில் சாப்பிடச் சென்றுவிடுவான். ஒருநாள் காலையில் 6 வயதுச் சிறுமி, அந்த ராணுவ வீரனிடம் வந்து `எனக்கு ஒரு தபால் எழுத வேண்டும்’ எனக் கேட்கிறாள். `யாருக்கு எழுத வேண்டும்?’ எனக் கேட்டவனிடம் `கடவுளுக்கு’ என்று பதிலளிக்கிறாள் சிறுமி.
`கடவுளுக்கு நீ என்னம்மா எழுதப்போகிறாய்?’ என்று கேட்கிறான் அந்த வீரன். அதற்கு, `மூணு நாளா என் அம்மா படுத்துக் கொண்டேயிருக்கிறார். கொஞ்சம்கூட அசையவே இல்லை. அவங்கள எழுந்து எனக்குச் சோறு போடச் சொல்லணும்’னு கடவுளுக்குக் கடிதம் எழுதிக் கொடுங்கனு சொல்றா.
ஏதோ கோளாறாக இருக்கிறதே என நினைத்த அந்த வீரன், அந்தச் சிறுமியுடன் அவள் வீட்டுக்குச் செல்கிறான். அங்கே போய்ப் பார்த்தவுடன் தெரிந்து கொள்கிறான் சிறுமியின் அம்மா இறந்துபோய் மூன்று நாள்கள் ஆகிறது என. அது அந்தக் குழந்தைக்குத் தெரியவில்லை. அந்த அம்மாவை அடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அந்தக் குழந்தைக்குத் தகப்பனாகிறான் அந்த வீரன். அந்தக் குழந்தையோடு தன்னை ஒப்புக் கொடுத்துக் கொள்கிறான். அன்று முதல் அவனது வாழ்க்கையின் முறையே மாறிவிடுகிறது.
இப்படியான ஒரு கதை, சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னால் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது. அந்தக் கதையிலிருந்துதான் பிரெஞ்சு மேதைகள் பிறந்தார்கள். அதே கதையிலிருந்துதான் ரஷ்ய மேதைகள் பிறந்தார்கள். நான் வரைக்கும் அங்கிருந்துதான் பிறந்தேன். மனிதனை மனிதனுக்கு உணர்த்துவதைத் தவிர இலக்கியத்துக்கு வேறு ஒரு வேலையும் இல்லை.

எழுத்தாளர்கள் ஏன் பாராட்டப்படவேண்டியவர்கள்? காரணம், அவர்கள் அவர்களுக்காகச் சிந்திப்பதில்லை. சமூக உயர்வுக்காக அவர்கள் தங்களை ஒப்புக் கொடுப்பதாலேயே இந்தச் சமூகம் எழுத்தாளர்களையும் கவனிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
– பிரபஞ்சன்
நன்றி: விகடன்
சமூக உயர்வுக்காக அவர்கள் தங்களை ஒப்புக் கொடுப்பதாலேயே இந்தச் சமூகம் எழுத்தாளர்களையும் கவனிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
– பிரபஞ்சன்
நன்றி: விகடன்