உள்நாட்டு செய்திகள்
வாட்ஸ்அப் சாட்பாட்

மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் பெறும் விதமாக வாட்ஸ்அப் சாட்பாட் ஒன்று பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதுபற்றி வாட்ஸ்அப் இந்தியாவின் வணிக நிர்வாக இயக்குநக் ரவி கார்க் ” இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருவது பொது போக்குவரத்தை பாதுகாப்பாகவும், ஸ்மார்ட்டாகவும், மிகவும் வசதியாகவும் பயனாளர்களை உணர வைத்துள்ளது. இந்தியாவில் உலக தரத்திலான மெட்ரோ சேவையை பல்வேறு நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது மும்பை, பெங்களூரு, புணே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பயனாளர்களின் வசதிக்காக வாட்ஸ்அப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு விரல் நுணியில் சேவைகளை வழங்கவுள்ளது. மேற்கூறிய நகரங்களில் தவிர இந்தியாவின் பிற நகரங்களிலும் மெட்ரோ சேவையை வாட்ஸ்அப் மூலம் டிஜிட்டல் மயமாக்க உள்ளோம்” அப்படீன்னார்