தமிழ் என்றும் அமிழ்தே /வெண்ணெய் உணங்கல் போலப்

தமிழ் என்றும் அமிழ்தே – )
குறுந்தொகையின் இந்தப் பாடலை இயற்றிய பெண் புலவர் வெள்ளிவீதியார் அவர்கள்.
” இடிக்கும் கேளிர்! நும்குறை ஆகம்
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமற் றில்ல:
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று,இந்நோய்: நோன்று கொளற்கு அரிதே”.
கலைஞர் அய்யாவின் சங்கத்தமிழிலிருந்து உரை.
அறிவுரை நல்கிடும் அன்பு நண்பனே!
அவ்வுரை என்னு டலை உருகாமல் தடுத்திடும் தன்மை கொண்டதாயின் தயங்காமல் ஏற்றி டுவேன்!
அவ்வாறு எனைக் காத்திடும் வலிமை அவ்வுரைக்கு உளதாயின் நன்றென்பேன்!
கதிரவனின் வெப்பம் தகிக்கும் கடும்பாறை யொன்றில் கையில்லாத முடவ னும் – பேச வாயில்லாத ஊமையுமான ஒருவன் உருகிக் கொண்டிருக்கும் பசு வெண்ணைதனை காப்பாற்ற முடியாது நிலையில் பாறையில் பாழாகும் வெண்ணெயினைப் பாதுகாக்க வாரீர் எனக் கூவவும் முடியாமல் பாய்ந்து சென்று எடுத்தேகிப் பத்திரப்படுத்தவும் இல்லாமல் கண்கொண்டு பார்க்கும் காவலனாக மட்டும் நின்று கொண்டிருக்கும் பரிதாபத்தைப் போல் நீயும் : காதல் பிரிவால் உருகிக் கொண்டிருக்கும் – எனக்கு நீண்ட அறிவுரைகளை நீட்டி முழங்குகின்றாய்
வில்லேருழவன் – வீரர் திலகம் – வணங்காமுடியோன் விரகதாபத்தால் வெந்திடும் இதயத்தில் இனியும் வேல் எறிதல் போல் அறிவுரை கூடாதெ ன்றுணர்ந்து விடை பெற்று போய்விட்டான் தூயன் எனும் தோழன்.
பொருள் விளக்கம்:-
நுங்குறை = உமது அறிவுரை
ஆகம் = உடல்
நிறுக்கல் = நிறுத்துதல்
வெவ்வறை மருங்கு= வெப்பம் நிறைந்த பாறை
கையில் ஊமன் = கையில்லாத ஒரு ஊமையன்
உணங்கல் =உருகி வீணாதல்
நோண்று கொளல்= பொறுத்துக் கொள்ளுதல்.
muruga shanmugam
