இலக்கியம்
தமிழ் என்றும் அமிழ்தே

குறுந்தொகையின் இந்த பாடலை இயற்றியவர்: புலவர் வெண்பூதி அவர்கள்
தமிழ் என்றும் அமிழ்தே -)
குறுந்தொகையின் இந்த பாடலை இயற்றியவர்: புலவர் வெண்பூதி அவர்கள்
யானே யீண்டை யேனே யென்னலனே ஆனா நோயொடு கானல:.தே துறைவன் றம் மூரானே மறையல ராகிய மன்றத் த:.தே.
( தலைவன் நெடுநாள் வராமல் வருந்திய தலைவி, இருவரின் நட்பினை யாவரும் அறிந்தனர். இன்னும் தலைவன் வராததை எண்ணி வருத்தமுடன் தலைவி, தோழிக்கு சொல்லும் கூற்று ).
நான் இவ்விடத்தில் தனியே உள்ளேன். எனது பெண்மை நலம் என்னின் நீங்கி அமையாத வருத்தத்தோடு கடற்கரைச் சோலையினிடத்து: தலைவன் தனது ஊரினிடத்துள்ளான். எம்மிடையே உள்ள மந்தணமாகிய நட்பை பற்றியச் செய்தியானது பலர் அறிவும் பழமொழியாகி பொதுவிடத்தின் கண் பரவியுள்ளது.
முருக சண்முகம்
