Uncategorizedஇலக்கியம்

(*நேமங்கள்…விதிமுறைகள்)தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு
வாழ்த்துகள்

சித்திரை வந்ததால்
சிறப்பான புத்தாண்டு
சீரெல்லாம் சேர்க்கட்டும்
செழிப்பாக வாழ்வாங்கு

இத்தரை மீதிலே
எழிலான செயல்யாவும்
ஈனங்கள் நீக்கியே
ஏற்றங்கள் காட்டட்டும்

நித்தியத் தமிழாலே
நேர்மைகள் வெல்லட்டும்
நீங்காத நினைவாக
நேமங்கள்* ஓங்கவே

முத்திரைப் பொன்போன்ற
மூன்றான தமிழோடு
மூவேந்தர் பாதையில்
முன்னோக்கிச் செல்வோமே!

(*நேமங்கள்…விதிமுறைகள்)

தமிழ் வணக்கத்துடன்
ச.பொன்மணி *நேமங்கள்..விதிமுறைகள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button