இப்படியும் ஒரு கலைஞர்

இப்படியும் ஒரு கலைஞர்
——————————-
பல ஆண்டுகளுக்கு முன் பாரிஜாதம் என்ற பாக்கியராஜ் படம் வெளி வந்தது. தோல்வி கண்டது.கலை அம்சத்தில் உயர்ந்த படம். இதைப் பற்றி தான்
உணர்ந்ததை ஒரு விமர்சனமாக எழுதி விகடனுக்கு அனுப்பி விட்டு, மறந்து
விடுகிறார் நடிகர் விவேக்….
8மணிக்கு ஒரு லேன்ட் லைன் போன் விவேக்கிற்கு. மறுமுறையில் கனத்த குரலில் *நான்தான் கலைஞர் பேசுகிறேன்*
யாரோ நம்மை ஏமாற்ற மிம்மிகிரை பண்ணுகிறார் என்று கருதி போனை
கட் பண்ணி விடுகிறார் விவேக்.
மறுபடியும் 5 நிமிடம் கழித்து போன்.
போனை எடுக்கிறார் விவேக்…..*நான்தான் கலைஞர் பேசுகிறேன்* .
*ஆகா இது மயில்சாமி வேலைதான் என கருதி, மறுபடியும் கட்.
மீண்டும் 5 நிடத்தில் போன்.மறுமுனையில் சண்முகநாதன். கலைஞர் பி.ஏ..
*என்னங்க…முதல்வர் தங்களை அழைக்கிறார்…நீங்கள் ஃபோனை கட் பண்ணி விடுகிறீர்கள்….இதோ ..
முதல்வர் பேசுகிறார் * என்று போன் கை மாறுகிறது
*நான் கலைஞர் பேசுகிறேன்.*_என்ற குரலை கேட்டதும் இன்ஸ்பெக்டர் வந்ததும் எழுந்து நிற்கும் ரைட்டர் போல விவேக் எழுந்து நின்று கொள்கிறார்..* ஐயா, சொல்லுங்கய்யா*
*நீங்க பாக்யராஜின் பாரிஜாதம் படம்
பற்றி விகடனில் எழுதிய கட்டுரை வாசித்தேன்..மிகவும் நன்றாக இருந்தது*
போனை வைத்து விடுகிறார் கலைஞர்
காலை 10 மணி வாக்கில் எதிர்பாராது பாக்கியராஜ் விவேக் வீட்டிற்கு வருகிறார்..விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி.”கையில் பொக்கே, சால்வை என நிற்கிறார் பாக்யராஜ்..
“என்ன சார் இதெல்லாம் .சொல்லி இருந்தால் நானே வீட்டிற்கு வந்திருப்பேனே” என்கிறார்
“இல்லை விவேக் , காலை ஐந்து மணிக்கே முதல்வர் எனக்கு போன் பண்ணி , விவேக் கட்டுரை படிச்சயா? இப்ப எங்க இருக்கே? எனக் கேட்கிறார்.
“நான் ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருக்கேங்கய்யா”
*அப்படியா ….அடுத்த ஸ்டேசனில் இறங்கி உடனே விகடனை வாங்கி படி….வீட்டுக்கு போனதும் உடனே விவேக்கை சந்தித்து, நன்றி சொல்லி விட்டு வா….*என அன்பு கட்டளை போட்டு விட்டார் என்கிறார் பாக்கியராஜ். இருவருமே நெகிழ்ந்து போய் விட்டனர்.
இனிய நாளை நினைத்து மகிழ்த்திருந்த விவேக்கிற்கு மாலை
இன்னொரு இன்ப அதிர்ச்சி. மாலை 4.மணிக்கு முதல்வர் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் ஃ போன் வருகிறது. “கலைஞரை சந்திக்க விரும்புகிறீர்களா? இன்று 4.45 க்கு உங்களுக்கு Appointment.”
முக்கால் மணி நேரத்தில் அரக்கப்பறக்க புறப்பட்டு கலைஞரை
சந்திக்கிறார்…முதல்வர் பணி இடையேயும் 1மணி நேரம் ஒதுக்கி விவேக்கிடம் தன் பழைய வாழ்வை எல்லாம் மனம் விட்டு பேசி அன்போடு அனுப்பி வைக்கிறார்.
இப்படி ஒரு முதல்வர் நடப்பது என்பதை தாண்டி கலைஞரிடம்
எப்போதும் ஒரு கலைஞர்தான் இருந்துள்ளார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஆச்சர்யம் தந்த ஒன்று.
——-
(விவேக உரையிலிருந்து.யூ டியூப்)
– ஜெயதேவன்