கட்டுரை

தீரன் சின்னமலை

👑

பிறந்த தினம் இன்று

தீரன் சின்னமலை👑 பிறந்த தினம் இன்று🐾🐾🐾:

வீரன் தீரன் சின்னமலை ஓர் வரலாற்று காவியம் ; தீரன் சின்னமலை 1756 ல் பழைய கோட்டை பட்டக்காரர் மரபில் பிறந்தார். தீரன் சின்னமலை யின் இயற்பெயர் தீர்த்தகிரி கி.பி 18 நூற்றாண்டில் பிற்பகுதியில் ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் இடையில் ஓடாநிலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் தமிழ் நாட்டில் தீரன் சின்னமலையின் பங்கு மகத்தானது.

வெள்ளையர்களை விரட்ட மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து போரிட்டார்.இளம் வயதிலேயே வீரம் செறிந்த வீரனாக பல தற்காப்புகலைகள் அறிந்து வலம் வந்து தம் நன்பர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து ஓர் படையை திரட்டினார்.

கொங்கு நாட்டுவரியை மைசூருக்கு வசூலித்து சென்றவர்களை தடுத்தி நிறுத்தி கொங்கு நாட்டு மக்கள் யாருக்கும் அடிமையில்லை என்பதை முழக்கமிட்டு அறிவித்தார்.”ஹைதர் அலியின் திவான் மீராசாகிப் கேட்டால் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓர் சின்னமலை பிடுங்கி விட்டான் என கூறுங்கள் ” எனக் கூறி ஆங்கிலேய வீரர்களை விரட்டி அடித்தார்.

அன்று முதல் தீர்த்தகிரி எனும் பெயர் மாறி சின்னமலை என அழைக்கப்பட்டார் . இவரின் வீரம் அறிந்த திப்பு சுல்தான் தூது அனுப்பி தீரன் சின்னமலையிடம் தமக்கு படை உதவிகள் மற்றும் ஆதரவுகளை ஆங்கிலேயர்களை எதிர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு தீரன் சின்னமலையும் கொங்கு நாட்டில் தேவையான படைபல உதவிகளை தாராளமாக கேட்குமாறு கூறினார் .

இருவரும் படைபலத்தை இணைத்தனர். தீரன் சின்னமலையுடன் கூட்டு சேர்ந்து திப்புசுல்தான் மூன்றுமுறை போரில் 2500 வீரர்களை வைத்து கொண்டு ஆங்கிலேய வீரர்கள் 10,000 பேரை விரட்டி அடித்தனர். ஆங்கிலேயருக்கு கடும் சவாலாக இருந்த தீரன் சின்னமலை திப்புவின் மரணத்திற்கு பின் கி.பி 1799ல் கர்னாடாகதை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் தூந்தாஜிவாக்த் என்பவருடன் பாளையக்காரர்கள் படையை இணைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்ய ஒப்பந்தம் போட்டார் தீரன் சின்ன மலை .

இரண்டு வருடங்கள் கழித்து கி.பி1801ல் கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலப்படையை பவானி காவிரிக்கரையில் வென்றார்.1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையை துரத்தியதாக வரலாறு.

அரச்சலூரில் 1803ல் கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிபெற்றார் இப்போரில் வெற்றி பெற்ற வெற்றிச்சின்னம் இன்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ளதென வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

போரில் வீரன் சின்னமலையை வெல்ல முடியாதென அறிந்த ஆங்கிலேயர்கள் சமையல்காரன் நல்லப்பனை பணம் தந்து தந்திரமாக தந்த ஆங்கிலேயர்களுக்கு தகவல் தந்தான் நல்லப்பன்.

உணவருந்திக்கொண்டிருந்த தீரன் சின்னமலை அவர் சகோதரர்கள் பெரியதம்பி,கிலேதார் தளபதி கருப்ப சேர்வை ஆகியோர்களை கைது செய்த ஆங்கிலப்படை கி.பி 1805ஆம் ஆண்டு 31ஆம் தேதி சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டு 4 பேரையும் கொன்று தன் கோபத்தை ஆங்கிலப்படை தீர்த்துக்கொண்டது.

ஆனால் தீரன் சின்னமலை மறைத்தாலும் அவர் விட்டுச்சென்ற புகழும் வீரமும் கொங்கு மண்ணில் எப்போதும் நிலைத்திருக்குமாறு அவர் வழி வந்த மக்களால் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடா நிலையில் மணிமண்டபம் கட்டி அவர்புகழ் தேயாதவாறு பாதுகாக்கப்படுகிறது.

ஈரோடு பக்கம் வந்தால் பார்த்துவிட்டு போகலாம். பவானியில் இருந்து சேலம் செல்லும் வழியில் சங்ககிரி என்னும் இடத்தில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் 200 வருடங்கள் கழித்து இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

May be an image of text that says "தீரன் சின்னமலை 17.04.1756 (பிறந்த நாள்)"

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button