தமிழ் என்றும் அமிழ்தே – குறுந்தொகை/ புலவர் கபிலர்.142. தலைவன் கூற்று

குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர் :புலவர் கபிலர்.
தமிழ் என்றும் அமிழ்தே –
குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர் :புலவர் கபிலர்.
” சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந் தனளோ விலளோ பானாட்
பள்ளி யானையினுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே ”.
கூற்று விளக்கம்: தலைவன்தலைவியைத்தற்செயலாகச்சந்தித்தான். அவளோடுஅளவளாவினான். அவள்மீதுகாதல்கொண்டான். பின்னர், அவளைவிட்டுப்பிரியவேண்டியநேரம்வந்தவுடன்பிரிந்துசென்றான். அவளைவிட்டுப்பிரிந்தாலும், தன்நெஞ்சம்அவளிடத்திலேயேதங்கிவிட்டதாகக்கருதுகிறான். இப்பாடலைத்தலைவன்தனக்குத்தானேசொல்லிக்கொண்டதாகவோஅல்லதுதலைவியின்தோழியிடம்கூறித்தலைவியைமீண்டும்சந்திப்பதற்கு, ”உதவிசெய்க” என்றுதலைவன்வேண்டுவதாகவோகருதலாம்.
( தலைவன் தன் தலைவியைக் கண்டு மகிழ்ந்த பின், என் உள்ளம் தலைவியினிடத்து உள்ளது. இதனை அவள் அறிந்தாலோ, இல்லையோ என அறிய முற்படும் தலைவனது கூற்று)
நடு யாமத்து படுத்துறங்கும் யானையைப் போல் பெருமூச்சு விட்டுக்கொண்டு, எனது நெஞ்சம் நான் தலைவியை பிரிந்து வந்த பின்னரும், அவளிடத்திலே இருக்கின்றது. சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து , மாலையை கட்டி, தினைப்புனத்தில் கதிரை உண்ணும் பொருட்டு வீழும் கிளிகளை ஒட்கின்ற பூவைப் போன்ற கண்ணை உடைய பேதையாகிய தலைவி இதனை அறிந்தாளோ இல்லையோ!.
பொருள்: பால் நாள் பள்ளி யானையின் உயிர்த்து – நடு யாமத்து
படுத்து உறங்கும் யானையைப் போல பெருமூச்சு விட்டுக் கொண்டு
சுனை பூ குற்று – சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து.
தன் உழையது – அவளிடத்திலே இருக்கின்றது
பூ கண் பேதை – பூவை போன்ற கண்ணை உடைய பேதையாகிய தலைவி.
அறிந்தனளோ இலளோ – இதனை அறிந்தாலோ இல்லையோ.
