கட்டுரை

‘ரோஜாவின் ராஜா’ ‘ஆசிய ஜோதி’ ஜவகர்லால் நேருவின் நினைவு நாள்

இன்று ‘ரோஜாவின் ராஜா’ ‘ஆசிய ஜோதி’ ஜவகர்லால் நேருவின் நினைவு நாள். 🥲

இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாகவும், அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான “நவீன இந்தியாவின் சிற்பி” பாரத ரத்னா ஜவகர்லால் நேரு ஆவார்..

1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 ல், இறக்கும்வரை வரை இப் பதவியை வகித்து வந்தார்.

உலகின் அணி சேரா இயக்கத்தை உருவாக்கிய மூன்று தலைவர்களில்ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய தலைவராகத் திகழ்ந்தார். ஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவுதான் இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

1964, ஜனவரி 10-ம் நாள் புவனேஸ்வரத்தில் (ஒடிசா) அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட நேருவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மே 27-ம் நாள் பிற்பகல் இரண்டு மணிக்கு அவரது உயிர் பிரிந்தது !

தீன் மூர்த்தி பவன் – நேரு பிரதமராக இருந்த காலத்தில் அவருடைய இல்லமாகவும், தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றைக செயல்பட்டு வருகிறது. நேரு அடக்க நினைத்த மதவாதம் இன்று பலமாக வளர்ந்து கொடூரக் கரங்களுடன் அலைகிறது. மதத்தின் பெயரால் அரசியல், தீவிரவாதம், உயிர்ப்பலிகள் ஆகியவை தொடர் வதும் அதையே தேர்தல் களத்தில் மூலதனமாக்கி வெற்றிபெறுவதும் இந்தியாவின் சாபக்கேடாக மாறி வருகிறது. இந்த நிலையில், நேரு முன்னெடுத்த மதச்சார்பற்ற கொள்கைகளை இன்று நினைவுகூர்வோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button