விளையாட்டு
தோனியின் கண்ணீர் அழகியதொரு அங்கீகாரம்!

காலம் சிலவற்றை உடனுக்குடன் சமன் செய்து விடுகின்றது.

இந்த ஆண்டு IPL போட்டிகளில் அரங்கேறிய அருவருப்பானதொரு அநாகரிகம், ரசிகர்களால் ஜடேஜாவின் அவுட் கோரப்பட்டதுதான்.
யாரோ ஒரு ரசிகன் அப்படி பேனர் பிடித்துவிட்டான் என்றெல்லாம் தப்பித்துவிட முடியாது. பலரின் பண்படாத மனநிலை அப்படித்தான் இருந்தது. ஒருவரைப் போற்றுவதற்காக இன்னொருவரை இகழும் தவறான மனப்போக்கு அது!
‘என்னை அவுட் ஆகச் சொல்லிக் கூச்சலிடுகிறார்கள்’ என ஜடேஜா சிரித்தபடியே சொல்லியிருந்தாலும், உள்ளுக்குள் மிக நிச்சயமாக வலித்திருக்கும்.
இறுதிப்போட்டியில் CSK அணியின் வெற்றி அந்த ’ரவீந்திர ஜடேஜா’ வாயிலாக நிகழ்ந்ததுதான் அறம்!
பாராட்டுகள் ஜடேஜா…
தோனியின் கண்ணீர் அழகியதொரு அங்கீகாரம்!
Erode Kathir (கதிர்)

