1 நொடி கூட யோசிக்கல.. விறுவிறுவென நடந்து சென்ற தோனி.. சார் நில்லுங்க! அப்படியே ஸ்டன் ஆன மும்பை வீரர்

சார் நில்லுங்க! அப்படியே ஸ்டன் ஆன மும்பை வீரர்
நேற்று மும்பை – சிஎஸ்கே இடையே நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதல் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் சிஎஸ்கே அணி வென்று வருகிறது.
இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே அணி எளிதாக லக்னோ அணியை வீழ்த்தியது. இந்த நிலையில்தான் நேற்று புதிய டீமுடன் மும்பைக்கு எதிராக சிஎஸ்கே அணி களமிறங்கியது.
நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (சி & டபிள்யூ.), ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், சிசண்டா மகலா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் களமிறங்கினர். இம்பாக்ட் வீரராக பேட்டிங் இறங்கும் போது ராயுடு மட்டும் களமிறங்கினார். இந்த சீசனில் முதல் முறையாக நேற்று மும்பைக்கு எதிராக நடந்த போட்டியில்தான் சிஎஸ்கே அணி முதலில் பவுலிங் செய்தது. சிஎஸ்கே அணியில் நேற்று ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், சிசண்டா மகலா, துஷார் தேஷ்பாண்டே என்று வலுவான பவுலர்கள் இடம்பெற்று இருந்தனர்.
முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டர், ஜடேஜாவின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது. ரஹானே 27 பந்தில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என்று மொத்தம் 61 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார். டெஸ்ட் பவுலர் என்று கருதப்பட்டு வந்த அவரின் இந்த சிறப்பான பவுலிங் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது
சுவாரசிய சம்பவம்: நேற்று மும்பை – சிஎஸ்கே இடையே நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டு வரப்பட்டது. அதை போலவே தற்போது வைடிற்கு ரிவ்யூ கேட்கும் விதியும் கொண்டு வரப்பட்டு உள்ளது. முன்பெல்லாம் நடுவர் வைடு கொடுத்தால் கொடுத்ததுதான். ஏன் வைட் கொடுக்கவில்லை என்று கேள்வி கேட்க முடியாது. பொதுவாக நடுவர் வைட் கொடுக்கவில்லை என்றால் கேள்வி கேட்க முடியாது.
ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் அதையும் ரிவ்யூ செய்ய முடியும். அந்த வகையில் நேற்று மும்பை அணியின் பேட்ஸ்மேன் ஹிருத்திக் ஷோக்கீன் சிஎஸ்கே வீசிய கடைசி பந்தில் வைட் கொடுக்கவில்லை என்று ரிவ்யூ கேட்டார். ஆனால் இதை பற்றி தோனி கவலையே படவில்லை. அவர் கீப்பர். அதனால் அவருக்கு தெரியும் ஒரு பந்து வைட் பந்தா இல்லையா என்று. அதனால் அவர் எதை பற்றியும் கவலைப்படாமல் அங்கிருந்து அப்படியே பெவிலியன் சென்றார், ஒரு நொடி கூட யோசிக்காமல் அவர் அப்படியே நடந்து பெவிலியன் சென்றார். அவரை பார்த்த இளம் வீரர் ஹிருத்திக் ஷோக்கீன்.. சார் நில்லுங்க.. ரிவ்யூ எடுத்து இருக்கிறேன் என்பது போல ஏக்கமாக பார்த்துக்கொண்டு இருந்தார். நேற்று களத்தில் நடந்த இந்த சம்பவம் பெரிய அளவில் வைரலானது.