கமலா தாஸ் காலமான தினம் இன்று

கமலா தாஸ் காலமான தினம் இன்று.
கமலா தாஸ் (மலையாளம்: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 – மே 31, 2009) ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.
கமலாதாஸ் 1934 இல், கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள ‘புன்னயூர்க் குளம்’ என்ற ஊரில் பிறந்தார். ஆங்கிலத்தில் மட்டும் கவிதைகள் எழுதியவர்.
‘கல்கத்தாவில் கோடைகாலம்’ (1965), ‘வம்சத்தவர்’ (1967), ‘பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்’ (1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக, `என் கதா’ (My Story) என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
ஆங்கிலக் கவிதைக்காக சாகித்ய அகாதமி விருதினை 1981இல் பெற்றார். ‘மாதவிக்குட்டி’ என்ற பெயரில் மலையாளச் சிறுகதைகளையும் எழுதி வந்தவர்.
கமலாதாஸின் கவிதைகள், கதைகள் பல சர்ச்சைகளைக் கிளப்பியவை. காரணம், இந்தியப் பெண்களின் செக்ஸ் ஆசைகள் குறித்து இவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் வெளிப்படையாக வெளிப்படுத்தும். இதன் காரணமாக கமலாதாஸ் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். இருந்தாலும் தன்னை நோக்கி பாய்ந்த விமர்சனங்களைப் புறம் தள்ளி விட்டு புரட்சிப் படைப்பாளியாகவே கடைசி வரை திகழ்ந்தவர் கமலா தாஸ்.
ஆங்கிலக் கவிதைக்காக சாகித்ய அகாதமி விருதினை 1981இல் பெற்றார்.