ஆன்மீகம்

145-வது பிறந்த நாள் விழா: அரவிந்தர் அன்னை

145-வது பிறந்த நாள் விழா: அரவிந்தர் அன்னை அறை 21-ந் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு திறப்பு

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் அறை 21-ந்தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி: பக்தர்களால் அன்புடன் அன்னை, என்று அழைக்கப்படும் மீரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி, பாரீஸில், துருக்கி எகிப்து யூத தம்பதியின் 2-வது குழந்தையாக பிறந்தார். 1914-ம் ஆண்டு புதுவையில் அரவிந்தரை சந்தித்து, ஆன்மீக பணியில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் நிறுவி 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி ஆரோவில் சர்வதேச நகரத்தை உருவாக்க அடிக்கல் நாட்டி பணியை தொடங்கினார். அன்னை வாழ்ந்த காலத்தில் அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள தனது அறை அருகில் இருக்கும் பால்கனியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு நின்று, பக்தர்களை ஆசிர்வதித்து தனது தினந்தோறும் பணியை தொடங்குவது வழக்கம். வருகிற பிப்ரவரி 21-ந் தேதி அன்னையின் 145-வது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் ஆரோவில் நகரம் 55-ம் ஆண்டு விழாவையொட்டி புதுவை ஒயிட்டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், முதலில் ஆசிரம வாசிகளின் சிறப்பு தியானம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து அன்னையின் அறை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அன்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button