கணித மேதை’ சகுந்தலா தேவி

கணித மேதை’ சகுந்தலா தேவி காலமான நாள்:
மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் ‘மனித கம்ப்யூட்டர்’ என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி, பெங்களூரில் இதே ஏப்21இல் மரணமடைந்தார். அவருக்கு வயது 80.
கம்ப்யூட்டர்களும் கால்குலேட்டர்களும் நம்மில் பலருக்கும் தெரியவே தெரியாத காலத்தில் அந்த இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கணக்கு கேள்விகளுக்கு விடைகளை அளித்தவர் சகுந்தலா தேவி. பெங்களூரில் 1939-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி பிறந்த அவர் மூன்று வயதிலேயே தன் கணிதத் திறமையை வெளிக்காட்டி உலகை அசர வைத்தார்.
8 வயதாவதற்குள் மைசூர் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் தன் கணிதவியல் சாகசங்களை நடத்திக் காட்டினார்.
ஒரு முறை லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் துறையினர் இவருடைய மனக் கணக்குத் திறனை சோதிக்கத் தீர்மானித்தனர்.
அதன்படி .1980-ம் ஆண்டு லண்டன் இம்பிரீயல் கல்லூரியின் கணினி பிரிவினர் அளித்த 7,686,369,774,870 X 2,465,099,745,779 என்ற 13 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 28 வினாடிகளில் விடையளித்து உலகையே வியக்க வைத்தவர், சகுந்தலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.