விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்தநாளின்று.

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்தநாளின்று.
அறிவியல் உலகில் எண்ணற்ற விஞ்ஞானிகள் தோன்றியிருந்தாலும் அவர்களில் முதன்மையானவராக, ‘அறிவாளி’ என்பதற்கு உதாரணமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் அடையாளப்படுத்தப்படுகிறார். இளமைக்காலத்தில், மற்ற விஞ்ஞானிகளைப் போல ஆராய்ச்சிக்கூடங்களில் பணியாற்ற வாய்ப்பின்றி, எண்ண ஓட்டங்களிலேயே ஆராய்ச்சி செய்து வழிக் கண்டவர்.
இருபதாம் நூற்றாண்டின் மகத்தான அறிவியல் அறிஞர். அவரது சார்பியல் கோட்பாடு, இயற்பியலில் புதிய கோணத்திற்கு கொண்டு சென்றது. அதுவரை கோலாச்சியிருந்த ஐசக் நியூட்டனின் கோட்பாடுகளில் புதைந்திருந்த முரண்பாடுகளைத் தகர்த்தெடுத்து அறிவியலில் புதிய தளத்திற்கு கொண்டுச் சென்றது.
1955-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி காலமானார். அப்போது ஐன்ஸ்டீனின் மூளை உடலிலிருந்து நீக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக பத்திரப்படுத்தப்பட்டது. மூளையில், எண்கள், கணிதம் சம்பந்தமான பகுதிகளில் சாதாரண மக்களைவிட அதிக அளவில் மாறுபாடுகள் இருந்தது புலப்பட்டது. பள்ளி கல்லூரிகளில், தேர்வுகளுக்கும் மதிப்பெண்களுக்கும் மாணவர்களைத் தயாரிக்காமல் அவர்களது விருப்பத்திற்கு தக்கவாறு, அறிவியல் சிந்தனைகளோடு உருவாக்கும்போது அதிக அளவில் ஐஸ்டீன்களை நாம் உருவாக்க முடியும்.