அறிவியல்

ஒட்டுமொத்த WhatsApp யூசர்களும் எதிர்பார்த்த ஒரு அம்சம்!

ஒட்டுமொத்த WhatsApp யூசர்களும் எதிர்பார்த்த ஒரு அம்சம்!

ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்கிற காலத்தில், எழுத்துப்பிழைகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன. ஆனால் இப்போது, வாட்ஸ்அப் வழியாக எத்தனை மெசேஜ்கள் வேண்டுமானாலும் அனுப்பி கொள்ளலாம் என்கிற தைரியத்தில் அவைகள் பெரிதும் கவனிக்கப்படுவதில்லை!

வாட்ஸ்அப் வழியாக மெசேஜ் செய்யும் போது அவசர அவசரமாக டைப் செய்வதும், ஏதேனும் ஒரு வார்த்தையை தவறாக டைப் செய்து அனுப்பிவிட்டு, பின்னர் அந்த குறிப்பிட்ட வார்த்தையை மட்டு சரியாக டைப் செய்து அனுப்புவதும் – நம்மில் பலருக்கும் ஒரு தினசரி வழக்கமாகி விட்டது.

ஆனால் இந்த வழக்கம் ஐமெசேஜ் (iMessage) மற்றும் டெலிகிராம் (Telegram) பயனர்கள் மத்தியில் கிடையாது. ஏனென்றால் குறிப்பிட்ட 2 மெசேஜிங் ஆப்களிலுமே ஒரு மெசேஜை அனுப்பிய பிறகும் கூட அதில் ஏதேனும் பிழை இருந்தால், அதை திருத்துவதற்கான ‘எடிட்’ விருப்பம் (Edit Option) அணுக கிடைக்கிறது. அப்படி ஒரு விருப்பம், வாட்ஸ்அப்பில் இல்லையே என்கிற நீண்ட நாள் குறையை தீர்க்கும் நோக்கத்தின் கீழ், வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 2022 இல் எடிட் மெசேஜ் (Edit Message) என்கிற அம்சத்தை சோதிக்க தொடங்கியது. குறிப்பிட்ட அம்சம் ஆண்ட்ராய்டு ஆப்பின் பீட்டா வெர்ஷனில் சோதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அதே அம்சம் ஐஓஎஸ் ஆப்பிற்கான பீட்டா வெர்ஷனிலும் வெளியாகியுள்ளது. இதன் மூலம், எடிட் மெசேஜ் அம்சமானது சோதனை கட்டடத்தின் விளிம்பில் இருப்பதையும், அது கூடிய விரைவில் அனைத்து வகையான வாட்ஸ்அப் பயனர்களையும் வந்தடையும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

WhatsApp எடிட் மெசேஜ் விருப்பம் எப்படி வேலை செய்யும்? ஐஓஎஸ் பீட்டாவிற்கு வந்துள்ள இந்த அம்சம், ஏற்கனவே ஆண்ட்ராய்டு பீட்டாவில் கிடைக்கும் எடிட் மெசேஜ் விருப்பத்தை போலவே தான் செயல்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட மெசேஜை லாங் பிரஸ் செய்வதன் மூலம் எடிட் என்கிற விருப்பத்தை அணுகலாம். பின்னர் தேவையான திருத்தங்களை செய்யலாம்.

அனுப்பப்பட்ட ஒரு மெசேஜை எத்தனை நிமிடங்களுக்குள் Edit செய்ய முடியும்? இந்த அம்சத்தின் கீழ் சில கட்டுப்பாடுகள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு மெசேஜை அனுப்பிய பிறகு அதை எடிட் செய்வதற்கு 15 நிமிடங்கள் என்கிற கெடு கிடைக்குமென்றும், அதற்குள் குறிப்பிட்ட மெசேஜை திருத்திக்கொள்ள வேண்டுமென்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்! அறியாதோர்களுக்கு ஐமெசேஜ் ஆப்பில் கூட இதே போன்ற ஒரு கட்டுப்பாடு உள்ளது. இது தவிர ஐமெசேஜ் ஆப்பில் எடிட் ஹிஸ்டரியும் (Edit History) காட்சிப்படுத்தப்படும். அதாவது ஒரு மெசேஜில் நீங்கள் என்னென்ன திருத்தங்களை செய்துள்ளீர்கள் என்கிற பட்டியல் மற்றவர்களுக்கு காட்டப்படும்.

வாட்ஸ்அப்பிலும் கூட Edit History காட்டப்படுமா? வாட்ஸ்அப்பை பொறுத்தவரை, எடிட் செய்யப்பட்ட மெசேஜிற்கான எடிட் ஹிஸ்டரி எதுவும் காட்டப்பட்டது. மாறாக அனுப்புநரால் திருத்தப்பட்ட ஒரு மெசேஜில் “எடிடட்” (Edited) என்கிற லேபிள் இடம்பெறும். இந்த அம்சம் போட்டோ, வீடியோ மற்றும் டாக்குமெண்ட்களில் அணுக கிடைக்காது என்பதையும் நினைவில் கொள்ளவும். வாட்ஸ்அப்பிற்கு வேறு என்னென்ன புதிய அம்சங்கள் வந்துள்ளது? ஐபோன்களுக்கு கிடைக்கும் லேட்டஸ்ட் வாட்ஸ்அப் வெர்ஷனில், வீடியோ கால்களுக்கான பிக்சர்-இன்-பிக்சர் ஆதரவு (Picture-in-picture support) சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் வழியாக வீடியோ கால் பேசிக்கொண்டே, எந்த இடையூறும் இல்லாமல் ஐபோனில் உள்ள மற்றொரு ஆப்பை திறக்க முடியும். மேலும் வாட்ஸ்அப் நிறுவனம், நியூஸ்லெட்டர் (Newsletter) என்கிற புதிய அம்சத்திலும் செயல்பட்டு வருகிறது. இது டெலிகிராம் ஆப்பில் உள்ள சேனல்களை (Telegram Channels) போலவே செயல்படும் என்றும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை சென்றடைய உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

thanks  https://tamil.gizbot.com/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button