டெம்பரவரி ஃபைல்ஸ்: போன் ஸ்டோரேஜ் ப்ரீ செய்ய இந்த ட்ரிக்ஸை செய்யுங்க

டெம்பரவரி ஃபைல்ஸ்: போன் ஸ்டோரேஜ் ப்ரீ செய்ய இந்த ட்ரிக்ஸை செய்யுங்க
How to free up storage space on Android: உங்க ஆண்ட்ராய்டு போனில் டெம்பரவரி ஃபைல்ஸ் கிளியர் செய்வதன் மூலம் போன் ஸ்டோரேஜ் ப்ரீ செய்ய முடியும்.
ஆண்ட்ராய்டு போனில் ‘Your Phone Storage running out of space’ என்று நோட்டிபிக்கேஷன் வருவதை பலமுறை பார்த்திருப்போம். இதற்கு நமது இன்டர்னல் ஸ்டோரேஜ் முறையாக மேனேஜ் செய்யாதது தான் காரணம். 32ஜிபி, 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இருந்தாலும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டிருப்போம். ஏனெனில் தற்போது வரக்கூடிய ஆப்கள் அதிக ஸ்டோரேஜ் கொண்டாதாக உள்ளது. அதனால் இதனை முறையாக மேனேஜ் செய்வது அவசியமாகிறது.
கூகுள் ஃபைல்ஸ்
கூகுள் ஃபைல்ஸ் செயலி உங்க இன்டர்னல் ஸ்டோரேஜ் ஸ்பேஸை விரைவாக ப்ரீ செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். சில போன்களில் கூகுள் ஃபைல்ஸ் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். உங்கள் மொபைலில் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், Google Play Store-ல் இருந்து டவுன்லோடு செய்யலாம்.

இப்போது கூகுள் ஃபைல்ஸ் ஓபன் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள கிளீன் பட்டனை கொடுத்து ஃபைல்ஸ் கிளியர் செய்யலாம். மேலும், removing duplicates, deleting junk files, removing old screenshots, large files மற்றும் பிற அம்சங்களைப் பயன்படுத்தியும் ஸ்டோரேஜ் கிளியர் செய்யலாம்.
அதேபோல் bin/trash folder-ல் உள்ள ஃபைல்களையும் கிளியர் செய்யலாம்.
கூகுள் போட்டோஸ் பேக்அப்
உங்களுக்கு போட்டோ எடுக்க அதிகம் பிடிக்கும் என்றால் உங்கள் போன் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் விரைவாக ஃபுல் ஆக உள்ளது. அதிக ரெசஸ்யூசனில் போட்டோ எடுக்கிறீர்கள் என்றால் கட்டாயம் ஸ்டோரேஜ் விரைவாக தீர்ந்து போக வாய்ப்பு உள்ளது. உங்கள் ஃபோனில் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் இல்லை என்றால், கூகுள் போட்டோஸ் 15 ஜிபி வரை இலவச ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்குகிறது.

கூகுள் போட்டோஸில் போட்டோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு, கூகுள் போட்டோஸ் ஓபன் செய்து உங்கள் வலப்புறத்தில் உள்ள profile pic-யை கிளிக் செய்யவும். இப்போது enable or disable backup என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை எனெபிள் செய்து போட்டோக்களை பேக்அப் எடுக்கவும்.
இப்போது உங்கள் போன் கேமராவில் உள்ள போட்டோகளை டெலிட் செய்யவும். கவலை வேண்டும் அந்த படங்கள் கூகுள் போட்டோஸில் ஏற்கனவே பேக்அப் எடுக்கப்பட்டிருக்கும்.
வாட்ஸ்அப் மீடியா
வாட்ஸ்அப் மீடியா கிளின் செய்வது மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு, வாட்ஸ்அப் சென்று வலப்புறத்தில் உள்ள three-dot மெனு கிளிக் செய்து , storage section data sub-menu சென்று manage storage கொடுக்கவும். அதன் பின் அங்கு நிறைய ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை தேர்ந்தெடுத்து டெலிட் செய்யவும். பல குரூப்களில் நாம் இருப்போம். அதில் வரும் போட்டோஸ், வீடியோஸ் ஸ்டோரேஜை ஃபுல் செய்யும். அதனால் இந்த ஆப்ஷன் உதவியாக இருக்கும்.

அதேபோல் மிகவும் குறைவாக பயன்படுத்தப்படும் கேம் ஆப்ஸ், சமூக வலைதள செயலிகளை டெலிட் செய்வதன் மூலமும் ஸ்டோரேஜ் கிளியர் செய்ய முடியும்.