வெற்றி மொழி: விக்டர் ஹியூகோ

1802-ஆம் ஆண்டு பிறந்து 1885 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த விக்டர் ஹியூகோ ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். எழுத்தாளராக மட்டுமின்றி நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கவிஞர், அரசியலாளர் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார்.
ஆரம்ப காலத்தில் பழமைவாதத்தில் தீவிரமாக இருந்தவர் பின்பு இடதுசாரி அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை தன்னுடைய படைப்புகளில் பிரதிபலித்தார். இவரது நாடகங்கள் திரைப்படங்களாகவும், மேடை நாடகங்களாகவும் அரங்கேறின. மிகச்சிறந்த புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்
விக்டர் ஹியூகோ 1802 ஆம் ஆண்டு பிப்.26 அன்று பிறந்தவர். எழுத்தாளராக Les Miserables, The Hunchback of Notre-Dame உள்ளிட்ட புகழ்பெற்ற படைப்புகளை எழுதினார். இதோடு, ஏராளமான படங்களையும் வரைந்து கண்காட்சி வைத்தார்.
*தன் வீட்டில் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் விக்டர் ஹியூகோ, கற்பனை தடைபடும்போது தன் வேலையாட்களை கூப்பிட்டு முழு ஆடைகளையும் கழற்றிக் கொடுத்துவிடுவார். நிர்வாண நிலையில் மீண்டும் பேனா பிடித்து நினைத்ததை எழுதி முடித்தபின்னரே ஆட்களை அழைத்து ஆடையை பெறுவது வழக்கம்.
*தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அவர்களறியாமல் வேடிக்கை பார்க்கவென துளைகளை சுவர்களில் அமைத்த எழுத்தாளர் விக்டர்.
*லெஸ் மிஸரபிள்ஸ் நாவலை எழுத மட்டும் விக்டர் பதினேழு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். இதில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 478 வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.
*விக்டர் ஹியூகோவின் 79 ஆவது பிறந்தநாளில் அவரது வீட்டுக்கு 50 ஆயிரம் பேர் வாழ்த்துகளைச் சொல்லவும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தேசிய கீதத்தை பாடியும் விக்டரை ஆச்சரியப்படுத்தினார்கள்.
விக்டர் ஹியூகோ எழுதிய லேஸ் மிசராபிள்ஸ்தான்
ஏழை படும் பாடு என்ற பெயரில் 1950 ஆம் ஆண்டு தீபாவளி நாளன்று வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் ஜாவர் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததனால் சீதாராமன் ஜாவர் சீதாராமன் என அழைக்கப்படலானார்(அப்பெயர் பின்னர் ஜாவர் சீதாராமன் என மருவியது
இத்திரைப்படத்தை எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு தமது பட்சிராஜா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாகத் தயாரித்தார்.
பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ எழுதிய லேஸ் மிசராபிள்ஸ் என்ற கதையைத் தழுவி சுத்தானந்த பாரதியார் ஒரு நாவல் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் இத்திரைப்படக் கதை அமைந்தது.
தொடக்கத்தில் பேராயராக நடிக்க நாகர்கோவில் கே. மகாதேவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ ராமுலு நாயுடு அவரை மாற்றி அந்தப் பாத்திரத்தில் செருகளத்தூர் சாமாவை நடிக்க வைத்தார். ஸ்ரீ ராமுலு நாயுடு கண்டிப்புக்கும், நேரந்தவறாமைக்கும் பெயர் பெற்றவர். ஒரு நாள் படப்பிடிப்புக்கு இயக்குநர் ராம்நாத் வரவில்லை. அதனால் நடிகர் கோபாலகிருஷ்ணன் அன்றைக்குப் படப்பிடிப்பு இருக்காது என எண்ணி சென்றுவிட்டார். ஆனால் ஸ்ரீ ராமுலு நாயுடு நடிகை ராகினிக்கு ஆண் வேடம் போட்டு அன்றைய படப்பிடிப்பை நடத்திவிட்டார்.
,விக்டர் ஹியூகோ இவரின் சில வெற்றி மொழிகள்
# குறுகிய வாழ்க்கையில் கவனக்குறைவாக நேரத்தை வீணடிப்பதன் மூலம் நாம் இன்னும் குறுகியதாகவே மாற்றுகிறோம்.
# அனைத்திலும் வெற்றி பெறுவதற்கான ரகசியம், விடாமுயற்சியே.
# புரட்சிகளை விட நாகரிகங்களே அதிக தீமைகளை செய்துள்ளன.
# கனவுகளை விட எதிர்காலத்தை உருவாக்கும் வேறு விஷயம் எதுவுமில்லை.
# முட்டாள்தனமான சொர்க்கத்தை விட, அறிவார்ந்த நரகம் சிறந்ததாக இருக்க முடியும்.
# சொல்ல முடியாத விஷயங்களையும், அமைதிக்கு சாத்தியமற்ற விஷயங்களையும் இசை வெளிப்படுத்துகின்றது.
# நன்கு கற்றுணர்ந்த மனிதனே தன்னுடைய அறியாமையைப்பற்றி அறிவான்.
# மற்றொரு நபரிடம் அன்பு செலுத்துவது என்பது கடவுளின் முகத்தை காண்பதைப் போன்றது.
# நாற்பது வயது என்பது இளைஞர்களின் முதுமை; ஐம்பது வயது என்பது முதியவர்களின் இளமை.
# எங்கு அன்பு தேனாக இனிக்கின்றதோ அங்கு வாழ்க்கையானது மலராக சிரிக்கின்றது.