ஓஹென்றி… -காலமானநாள்

ஓஹென்றி… -காலமானநாள்:
சிறுகதை உலகின் தன்னிகரற்ற எழுத்தாளர். அவரது கதைகள் அதிரடி க்ளைமாக்ஸுக்காகவே புகழ்பெற்றது.
ஓ ஹென்றியின் புகழ்பெற்ற சில கதைகளும், அதன் முடிவுகளும்…
The Gift of the Magi: ஜிம், டெல்லா இருவரும் ஏழைத் தம்பதிகள். ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் பரிசு வழங்க முடிவு செய்கிறார்கள்.
ஜிம், தனது கைக் கடிகாரத்தை விற்று… டெல்லாவுக்கு விலை உயர்ந்த சீப்பு வாங்குகிறான்.
டெல்லா, தன் அழகிய நீண்ட கூந்தலை விற்று… ஜிம்மின் கடிகாரத்துக்கு ஒரு ஸ்டிராப் வாங்குகிறாள்!
The Ransom of Red Chief: இரண்டு ரவுடிகள் சேர்ந்து 10 வயதுச் சிறுவனை பணத்துக்காகக் கடத்துகிறார்கள்.
கடைசியில் அந்தப் பையனின் சேட்டை பொறுக்க முடியாமல், அவனது தந்தைக்கு 250 டாலர் பணத்தைக் கொடுத்துவிட்டு, பையனை விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள்!
The Cop and the Anthem: நியூயார்க் நகரில் தெருப் பொறுக்கியாகத் திரியும் ஒருவன், குளிர் தாங்க முடியாமல், குற்றம் செய்து சிறை செல்ல நினைக்கிறான்.
என்ன குற்றம் செய்தாலும் போலீஸ் கண்டுகொள்ளவில்லை. சர்ச் வாசலில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறான்.
பணம் கிடைக்கிறது. வாழ்க்கை மாறுகிறது.
மனம் திருந்தியவனை சந்தேக கேஸில் உள்ளே தள்ளுகிறதுபோலீஸ்!