மரணம் உங்களை அச்சுறுத்துவது உண்டா

மரணம் உங்களை அச்சுறுத்துவது உண்டா?
மரணம் அல்ல. ஆனால் நோய்களும், பலகீனங்களும் அச்சுறுத்துவதுண்டு. மருத்துவமனைகள், சுகவீனம் மற்றும் மற்றவர்களின் நோய்களுடனும் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டிருக்கிறேன். ஒரு அசைந்தாடும் நாற் காலி இங்கிருக்கிறது. வீட்டின் உணர்ச்சிப்பூர்வ பொருள் இது. என்னுடைய மிகவும் இனியதோழி ஒருவர் கொடுத்தது. அவள் புற்றுநோயால் மாண்டாள். புற்று நோய் அவள் மூளையை அடைந்தபோது எங்கள் இருவ ருக்கும் முடிவு நெருங்கியது தெரிந்துவிட்டது. முடிவு எப்படி ஏற்படும் மற்றும் அதை எப்படி சிறந்தமுறையில் எதிர்கொள்வது என்பதை தெரிந்துகொள்ள நான் அவளுடன் மருத்துவமனைக்குச் சென்றேன். இன்னும் சிலவாரங்களில் மூளை செயலிழந்துவிடும் என்று மருத் துவர் கூறினார். எனவே அடுத்தநாள் எனது வீட்டுக்கு கையில் இந்த அழகான நாற்காலியுடன் மதிய உணவுக்கு வந்தார். நான் அதை விரும்பியதை அவள் அறிவாள். அவள் சொன்னாள், ‘இது உன்னுடையது. அது இங்கே இருக்கட்டும்’ என்றார். மேலும் அவள், ‘இதில் நீ அமர்ந்து உன்னுடைய புதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை என்னுடைய மூளை செயல்படும் இப்போது படித்துக்காட்டவேண்டும். நான் எங்கு செல்கிறேனோ அந்த இடத்துக்கு உன்னுடைய நூலின் ஒரு துணுக்குடன் செல்ல விரும்புகிறேன்’ என்றார். அவர் இறந்தார். மரணம் குறித்த எனது பயம் அதன் பிறகு குறைந்துவிட்டி ருந்தது. அவளால் அது முடியும் என்றால், என்னாலும்.. என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் நோய்வாய்ப் படுதல் கொடுமையானது.
– அருந்ததிராய் நேர்காணலில் சொன்னது
நன்றி:புதுவிசை