கட்டுரை

அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள்

அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள் 🙁 International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade ) :

ஆண்டுதோறும் மார்ச் 25 அன்று ஐக்கிய நாடுகள் அவையினால் நினைவுகூறப்படும் ஒரு பன்னாட்டு நாளாகும்.

அட்லாண்டிக் பெருங்கடலுக்கப்பால் இடம்பெற்றுவந்த அடிமை வணிகத்தினால் பாதிக்கப்பட்டோரை அல்லது உயிரிழந்தோரை நினைவுகூறும் முகமாக ஐக்கிய நாடுகள் அவை 2007 ஆம் ஆண்டு முதல் இந்நாளைக் கடைப்பிடித்து வருகிறது.

இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர்.இது “வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்” எனக் கருதப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button