கூட்டுறவுஊழியருக்கு ரூ.14 லட்சம் சம்பளம் பாக்கி 30 ஆண்டுகளுக்கு பின் கூட்டுறவுவங்கி ஜப்தி

ஊழியருக்கு ரூ.14 லட்சம் சம்பளம் பாக்கி 30 ஆண்டுகளுக்கு பின் வங்கி ஜப்தி
✍️திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தெற்கு தெருவில் வசித்து வருபவர் சுப்பையா (68). இவர் சிறுகம்பையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 1977 முதல் 1993 வரை செயலாளராக பணியாற்றியுள்ளார்.*
✍️இந்த காலத்தில் அவருக்கு சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேல் ஊதியம் வழங்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. இதன்படி ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் ஊதியம் நிலுவையில் இருந்த நிலையில் அவர் ஓய்வு பெற்றார்.
✍️அவர் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட்டுறவு சங்கம் அவருக்கான சம்பள நிலுவைத்தொகையை வழங்கவில்லை என தெரிகிறது. இதனால், அவர் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
✍️விசாரணை முடிவில் அவரது ஊதிய நிலுவை தொகையை வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. இருப்பினும் அவர்கள் சம்பளத்தை கொடுக்காததால் சிறுசும்பையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
✍️இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என திருவாடானை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் திருவாடானை நீதிமன்ற ஊழியர் ஆனந்தராஜ் நேற்று சிறுகம்பையூர் வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இருந்த லேப்டாப், பீரோ, மேஜை ஆகியவற்றை ஜப்தி செய்தார்.