முக்கோண மனிதன்

முக்கோண மனிதன் – பிருந்தா சாரதி
*
அன்பின் புன்னகைகளை வாழ்வின் வலிகளைப் பழகு மொழியில் எழுதுவதில் கைதேர்ந்தவர் பிருந்தா சாரதி. இந்தக் கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள எல்லாக் கவிதைகளிலும் நிபந்தனையற்ற மனிதநேயம் மிளிர்கிறது.
‘எங்கிருக்கிறது உன் அழகு?’ எனத் தலைப்பிட்ட கவிதையில் ஓரிடத்தில்,
‘அடைமொழி நாளொன்றில்
சேற்றில் சரிந்து கிடந்த செடி ஒன்றை எடுத்து மீண்டும் நட்டு வைத்தாயே அந்தக் கருணையில் இருக்கிறது
உன் கரங்களின் அழகு,’
எனும் போது கவிஞரின் மனதின் அழகு நமக்குத் தெரிந்து விடுகிறது.
‘பெயரில் என்ன இல்லை?’ என்று ஒரு கவிதை.
‘எளிதாகச் சொல்கிறீர்கள் பெயரில் என்ன இருக்கிறது என்று.
அடையாள அட்டை இன்றியே
ஒருவரைப் பற்றிய ஏராளமான விவரங்களை அது உளறி விடுகிறது,’
என்று எழுதி இருப்பதை வாசித்த பிறகு பெயரில் என்னதான் இல்லை என்கிற முடிவுக்கு நாம் வர வேண்டி இருக்கிறது.
*
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்,
எண் 9, ரோகிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர் மேற்கு,
சென்னை 600078 .
போன் : 99404 46650, விலை: ரூபாய் 250.
*
நன்றி: குமுதம் 05.04.2023