ஐடி ஊழியர்களே உஷார்.. Accenture போல.. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வும் அறிவிக்க வாய்ப்பு..?

அக்சென்சர் நிறுவனம் வியாழக்கிழமை தனது உலகளவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், வருடாந்திர வருவாய் மற்றும் லாப கணிப்புகளை குறைப்பதாகவும் கூறியுள்ளது.
இவ்விரு முக்கியமான அறிவிப்புக்கு அடிப்படையான காரணம் மோசமான உலகப் பொருளாதாரக் சூழ்நிலைகள் மற்றும் டெக் சேவைகளில் கார்பரேட் நிறுவனங்கள் தனது முதலீடுகளை குறைத்துள்ளதன் காரணமாக புதிய வர்த்தகம் கிடைப்பதில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது தான்
அக்சென்சர் நிறுவனம் தனது நிலையை வெளிப்படையாக அறிவித்த நிலையில், இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, LTImindtree நிலைமை என்ன..
இந்திய ஐடி துறை இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, LTImindtree, அக்சென்சர், சிடிஎஸ் என அனைத்தும் ஒன்றுடன் ஒன்று போட்டிப்போடும் நிறுவனங்கள் தான். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு நிறுவனத்தின் திட்டத்தை பெற இந்த 6-7 நிறுவனங்களும் போட்டிப்போடும்.
இந்த வகையில் அனைத்து நிறுவனங்களும் ஓரே மாதிரியான வர்த்தக கட்டமைப்பை தான் வைத்திருக்கும், இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில காலாண்டுகளாக வர்த்ககம், வருவாய், லாப அளவிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பேட்டனை தான் கடைப்படிதித்தது. அப்போ டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா-வும் பணிநீக்கம் செய்யுமா..?
அக்சென்சர் நிறுவனத்தின் பணிநீக்கத்திற்கு முக்கியமான காரணம் கடந்த 2 வருடத்தில் அதிகப்படியான ஊழியர்களை பணியில் சேர்த்தது. ஆனால் தற்போது வர்த்தக வளர்ச்சி மற்றும் வருவாய் உயர்வுக்கான வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காலாத்தில் இருந்து உலகளவில் ஐடி மற்றும் ITES துறையில் பல்வேறு சேவைரக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் அதிகப்படியான ஊழியர்களை பணியில் சேர்த்தது. இதில் அக்சென்ச்சர் நிறுவனம் சுமார் 40 சதவீத ஊழியர்களை அதிகரித்தது
.
அதேபோல் 2021-22 ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் 1,03,546 ஊழியர்களை புதிதாக சேர்த்தது, இதே காலக்கட்டத்தில் இன்போசிஸ் 54,396 ஊழியர்களையும், விப்ரோ 45,416 ஊழியர்களையும், ஹெச்சிஎல் நிறுவனம் 39,900 ஊழியர்களை பணியில் சேர்த்தது.
அக்சென்சர் நிறுவனத்திற்கு நடந்த அனைத்து இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா-க்கும் நடந்துள்ளது. இந்த நிலையில் CIER HR நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் Aditya Narayan Mishra, அக்சென்ச்சர் போல் இந்திய ஐடி நிறுவனங்களும் பணிநீக்கம் செய்ய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமை ஏற்கனவே இந்திய ஐடி நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களை பணியில் சேர்க்க முடியாமல் உள்ளது, இதேபோல் அதிகப்படியான ஊழியர்கள் ப்ராஜெக்ட் கிடைக்காமல் பென்ச்-ல் உள்ளனர், இது அனைத்து முன்னணி நிறுவனங்களிலும் இருக்கும் பிரச்சனையாக உள்ளது.
thanks: https://tamil.goodreturns.in