தோழர் ஜீவாவுக்கு சிலை வைத்ததில் எம்.ஜி.ஆர் பங்களிப்பு.

தோழர் ஜீவாவுக்கு சிலை வைத்ததில் எம்.ஜி.ஆர் பங்களிப்பு.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரான ஜீவா அவர்களின் மீது பேரன்பு கொண்டவர் பாலதண்டாயுதம். ஜீவாவின் மரணத்துக்குப் பின் அவருக்கு சிலை எழுப்ப பாலதண்டாயுதம் முடிவு செய்தார். நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாகத் திகழ்ந்த, எல்லா தரப்பினரின் மதிப்பையும் பெற்றிருந்த ஜீவாவின் சிலையை நிறுவுவதற்காக கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள், பிரமுகர்களிடம் நிதி திரட்டினார் பாலதண்டாயுதம். ஓரளவு நிதி சேர்ந்திருந்தது.
‘எம்.ஜி.ஆரிடமும் நிதி கேட்கலாமா?’ என்று பாலதண்டாயுதத்துக்கு ஒரு யோசனை. ஆனால், எம்.ஜி.ஆரைப் பற்றிய தனது கடுமையான விமர் சனங்கள் அவரது மனதில் நிழலாடி தயக்கத்தை ஏற்படுத்தின. இருந்தாலும் எம்.ஜி.ஆரை சந்தித்து ஜீவாவின் சிலைக்கு நிதி கேட்பது என்று முடிவு செய்து அவரை சந்தித்தார். ‘தனக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ’ என்று தயங்கிபடி சென்ற பாலதண்டாயுதத்தை அகமும் முகமும் மலர மகிழ்ச்சியுடன் வரவேற்றார் எம்.ஜி.ஆர்.
வந்த விவரம் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு மேலும் மகிழ்ச்சி. மனபூர்வமாக நன்கொடை வழங்கு கிறேன் என்றார். பாலதண்டாயுதத்துக்கும் மகிழ்ச்சி ஒருபுறம். அதோடு, தான் பல சந்தர்ப் பங்களில் தாக்கி பேசியும் அதுபற்றிய விவரமே தெரியாதவர் போல தன்னுடன் எம்.ஜி.ஆர். இன்முகத்துடன் பழகியதால் வியப்பு மறுபுறம்.
‘‘சிலை வைக்க உங்கள் கணக்குப்படி எவ்வளவு செலவாகிறது?’’ எம்.ஜி.ஆர். கேட்டார்.
குறிப்பிட்ட தொகையை சொல்கிறார் பால தண்டாயுதம்.
‘‘அந்த தொகைதான் என் நன்கொடை’’ – இது எம்.ஜி.ஆர்.
பாலதண்டாயுதத்துக்கு இன்ப அதிர்ச்சி. பின்னர், அவரிடம் ‘‘நான் கம்யூனிச கொள்கையில் ஈடுபாடு கொண்டவன். என் படங்களில் பாடல்கள், வசனங்கள் மூலம் கம்யூனிச கொள்கைகளையும் சொல்லி வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொதுவுடமை கொள்கை உடன் பாடே. சிறந்த பேச்சாளரான நீங்கள் உங்கள் பேச்சால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்கள் ஆற்றலை என்னை தாக்கு வதில் வீணடிக்கிறீர்களே? பொதுவுடமை கொள் கையை பரப்புவதில் நீங்கள் மேலும் சிறப்பாக தொண்டாற்ற வாழ்த்துகள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
அவரது உயர்ந்த குணத்தையும் பண்பையும் அறிந்து நெகிழ்ந்த பாலதண்டாயுதம், அன்று முதல் எம்.ஜி.ஆரை தாக்குவதை நிறுத்தியதோடு மட்டுமல்ல; அவரது குணநலன்களை நண்பர் களிடம் புகழ்ந்தார்