நண்பனுக்கு வேலை கிடைத்த கதை

நண்பனுக்கு வேலை கிடைத்த கதை
இதைப்படித்த பின்பு சிரிப்பதோ அல்லது சிரிக்காமல் இருப்பதோ உங்கள் இஷ்டம் . நண்பன் சொன்னதை நான் என்னுடைய பாணியில் சொல்லுகிறேன்
மானேஜர் இன்டர் வியூநடத்த ஆரம்பித்த முதல் கதை ஆரம்பம்
‘என்பெயர் கண்ணன்’
‘சரி ,நீ பேஸ்புக்ல இருக்கியா’
‘இருக்கேன் சார்’
‘என்னப்பா ஐடி’
‘கள்ளக்குறிச்சி கண்ணன் கள்ளக்குறிச்சி ஊர்பெயரு சார்’
‘இது ஒரு ஐடியா’
‘எவ்வளவு லைக் வாங்கறே’
‘சார் வந்து ஒரு லைக் கூட வரமாட்டேங்குது’
‘ஆமா நீ இப்படி ஐடி வைச்சா எப்படி லைக் வரும் ,கஸ்மாலம் கண்ணன் பொறம்போக்கு ராமசாமி இப்படி வைக்கனும் ,’
‘அது வந்து சார்,,’
‘என்ன புராபைல் பிக்சர்’
‘என் படம் சார் ,’
‘காமி, இது ஒரு படமா ,நீயும் உன் மூஞ்சியும்ஒரு நடிகை படம் இல்லனா ஒரு நாய் இல்ல குரங்கு படம் போடனும்பா’
‘சார் நடிகை ‘படம் போட்டு எப்படி சார் இப்படி ,கஸ்மாலம் கண்ணன் பொறம்போக்கு ராமசாமி ஐடி வைக்கமுடியும்’
‘என்ன கேள்வி கேக்காதே ,வைச்சுட்டு அப்புறம் சொல்லு ஆமா என்ன ஸ்டேட்டஸ் போடறே’
‘சார் ,,,,பாருங்க’
‘யோவ் , பொன்மொழி ,கத்தரிக்காய் சாம்பார் வைப்பது எப்படி, வீட்டு குறிப்புகள் இதல்லாம் ஒரு ஸ்டேடஸ்ன்னு போட்டா யாருய்யா லைக் பண்ணுவாங்க’
‘எனக்கு வேறு ஏதும் தெரியல சார்’
‘இத பாரு கவிதை, லைவ் ஸ்டேடஸ் மொக்கை ஜோக்ஸ் இப்படி போடனும் பா’
‘மொக்க ஜோக்ஸ்ன்னா ‘
‘அதுவா , ப டிச்சா சிரிப்பே வரக்கூடாது அதான் ,,’
;கவிதைன்னா இப்படி எழுது’
;எப்படி சார்’
;நான்
வெயிலில் நின்றேன்
சூரியன் என்னை சுட்டான்
உடல் கறுத்து கருப்பானது
கருப்புதான் எனக்கு பிடித்த கலரு’ இப்படி இருக்கனும்பா’
‘சார் இதான் கவிதையா’
;லைவ் ஸ்டேடஸ்சான்னா
இங்கு மழை
செடிகள் நனைந்தன
பூக்களும் நனைந்தன
நானும் நனைந்தேன் ஒருவாரமா துவைக்காத என் ஆடைகளும் நனைந்து சுத்தமானது’ இதான்பா லைவ் ஸ்டேடஸ்
‘ சூப்பரு சார் நீங்க எங்கோ போயிட்டீங்க’
‘ஆமாம்பா இப்படிதான்சூப்பர் நைஸ் ,அருமைன்னு கமண்ட் வரும் ‘
அப்புறம் என் நண்பன் .இப்படி பல ஸ்டேடஸ் போட்டுபிரபலமாகி அவனுக்கு வேலை கிடைச்சு பெரிய ஆளாகி என்னை ஒரு மண்புழுவைப்போல பாத்து நக்கலடிச்சது அது ,இன்னோரு கதை