சினிமா

காதல் என்னும் கோயில்

காதல் என்னும் கோயில்

1980-களில் வெளியாகி வெற்றிபெற்ற பல திரைப்படங்கள் பல ,அப்படிப்பட்ட படங்களில் இளம் மனங்களுக்குப் பெரும் விருந்து படைத்த ஒன்று எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் ரஜினி, ரதி நடித்த ‘கழுகு’.

காதல் திருமணம் செய்துகொள்ளும் ரஜினி-ரதி ஜோடிக்குப் திருமணப் பரிசாக ஒரு பஸ் வழங்கப்படுகிறது.

படுக்கை, குளியல் வசதிகள், சமைக்கும் கருவிகள் என்று சகல வசதிகளுடன் ஒரு நகரும் வீடாக இருக்கும் அந்தப் பேருந்தில், நெருங்கிய நண்பர்களின் துணையுடன், இதுவரை அறிந்திராத பகுதிகளுக்கு அவர்கள் பயணம் செய்ய புதிய இடம் ஒன்றில் அவர்கள் சந்திக்கும் மர்மமான சம்பவங்கள்தான் படத்தின் கதை.

படம் முழுவதும் குதூகலம் தரும் பயணத் துணையாக, இளையராஜாவின் இசை கூடவே பயணித்து நம்மையும் கதையுடன் ஒன்ற செய்யும் .

மலைக் காற்றின் தீண்டல்.

பாடல்களில் இசைக் கருவிகளுக்கு மாற்றாக, குரல்களை வைத்து இளையராஜா செய்த பல பரிசோதனைகள் பல அவரின் பல பாடல்கள் . முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தது. இப்படத்தில் இடம்பெறும், ‘

கனவில் ஒலிக்கும் பாடல் ‘காதல் எனும் கோவில்’

ஆயிரக் கணக்கான திரைப் பாடல்களைப் பாடியவர்களுக்குக் கிடைக்கும் புகழ், சிலருக்கு ஒரே பாடல் மூலம் கிடைத்துவிடுகிறது

. இப்படத்தில் இடம்பெறும் ‘காதல் எனும் கோவில்’ பாடலைப் பாடிய சூலமங்கலம் முரளி அந்த பேறு கிடைத்துள்ளது . சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ராஜலட்சுமியின் மகன் இவர். சில பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால், சினிமாவில் அவர் பாடிய பாடல், அநேகமாக இந்த பாடல் மட்டும்தான் என நினைக்கிறேன்

. இவருடைய குரல் + பல உயரங்களுக்கு அனாயாசமாகப் பறந்து செல்லும் குரல், பாடல் உருவாக்கும் கற்பனை மிக நுட்பமானது என நினைக்கிறேன்

. மாலை நேரத்தின் மஞ்சள் நிறம் கரைந்துவிடாத மாலையும் இரவும் சந்திக்கும் நேரமே.. கடல், மலை, மரங்கள் என்று எதுவுமே இல்லாத பரந்த சமவெளி. பூமியைத் தொட்டுக்கொண்டே புரளும் பிரம்மாண்டமான திரையாக வானம். அதில் ஆங்காங்கே நட்சத்திரங்கள்.

இந்த கனவுப் பிரதேசத்தின் அமைதிக்கு நடுவில் மென்மையாக ஒலிக்கத் தொடங்குகிறது கிட்டார். சற்று நேர நடைக்குப் பின்னர் மெதுவாக ஓடத் தொடங்குவதுபோல், தொடக்க இசைக்குப் பின்னர் வேறுபட்ட திசையில் பாடல் திரும்பும். வேகம் கூடும் கிட்டாருடன், ராஜாவின் புல்லாங்குழல் ரகசியமாகக் கொஞ்ச, பாடல் தொடங்கும்.

நிரவல் இசையில் வயலின் சேர்ந்திசைக்கும்போது , விமானம் தரையிலிருந்து வானத்துக்கு ‘டேக்-ஆஃப்’ செய்யும் அற்புதத்தை உணர முடியும். அது போல சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்ட இசை இந்தப்பாடல்

. தரையில் நமது கால்கள் நிற்காமல் அந்தரத்தில் மிதந்து செல்லும் உணர்வைத் தருகிறது என்றால் அது உண்மையே

. கனவுகளில் தோன்றும் நிலப்பரப்பின் இசை வடிவம் என்று நிச்சயமாக இந்தப் பாடலைச் சொல்லலாம்.

இந்தப்பாடலின் வரிகளை பின்னர் தருகிறேன்

இசை ஞானியுடன் பயணம் செய்யுங்க என்னுடன்

#காதல்என்னும்கோயில் வரிகள்

திரைப்படம்:கழுகு

இசை:#இளையராஜா

பாடகர்: சூலமங்கலம் முரளி

எழுத்தாளர்:பஞ்சு அருணாச்சலம்

ஏன் #சூலமங்கலம் முரளி பின்னர் பாடாமல் போனார்

வாழ்த்துகள் சூலமங்கலம் முரளி

இந்தப்பாடலை கேட்டுவிட்டு ஒரு வாரமாக இந்தப்பாடல்தான்

என் முணு முணுப்பில்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button