கஸ்தூரிபாய் காந்தி

கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியோட துணைவியாரின் பிறந்தநாள்
மகாத்மாவின் மனைவி கஸ்தூரிபா ஓர் அசாதாரணமான பெண்மணி. எதையும் மன்னிக்கும் குணம் உடையவர், மிக தைரியமானவர். நம்பமுடியாத அளவுக்கு விசுவாச குணமுடையவர். காந்தியின் மிக விசுவாசமுடைய சிஷயை மட்டும் அல்ல; அவரை கூர்மையாக விமர்சிக்கும் செல்வாக் குடைய விமர்சகரும் கூட. கஸ்தூர்பா வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு மட்டுமல்ல. – –
லார்ட் அட்டென்பரோ
சொர்க்கத்தில் உள்ள மகான்களோடு வாழ்வது பேரின்பமும் மகிமையும் ஆகும். ஆனால் இப்புவியில் ஒரு மகானோடு வாழ்வதோ? அது வேறு ஒரு விஷயமாகும்! – – காந்தியின் செயலாளர் மஹாதேவதேசாய்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் கஸ்தூர்பா கபாடியாவும் ஒரே ஆண்டில் -1869- குஜராத்தின் கடலோர ஊரான போர்பந்தரில் பிறந்தவர்கள்.
கஸ்தூரிபாவின் தந்தை கோகல்தாஸ் கபாடியா ஆப்பிரிக்க, அரேபிய மார்கெட்டுகளில் துணி, தானியம், பஞ்சு ஆகியவற்றில் வியாபாரம் செய்தவர். காந்தியின் தந்தை கரம்சந்த் காந்தி போர்பந்தர் ஆட்சியாளர் ராணாவிற்கு திவானாக செயல்பட்டவர். மோகன்தாசுக்கும் கஸ்தூர்பாவுக்கும் 7 வயதில் நிச்சயதார்த்தமும் 13 வயதில் திருமணமும் நடந்தது.
காந்தியின் பேரனும் மோதிலால் காந்தியின் மகனுமான அருண் காந்தி – எல்லோருடைய கருத்துப்படி கஸ்தூரிபா அனைவரையும் தன்வயப்படுத்தும் பெண் ஆக இருந்தார் என்றும் அவள் புத்திசாலி, சுதந்திரமாக செயல் படுபவள்; பயமற்றவள்; மிகவும் அழகானவள் என்றும் தனது கஸ்தூர்பா-ஒரு வாழ்க்கை என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.