இலக்கியம்
எல்லாம் என் அம்மாவுக்காக

கண்கள் கலங்கும் க(வி)தை
பசுமையான மாநிலம் தான் கேரளம்
பசுமையான வாழ்வு இவர்கள் காணவில்லை
பெற்றோர் காப்பது தம் பிள்ளைகளை
இந்தப் பிள்ளை காப்பதோ தம் பெற்றோரை
கண்ணே ஈரமாக்கும் இந்தப் பிஞ்சின் உழைப்பு
தன்னை வருத்திச் செய்யும் செயலில் முனைப்பு
அன்னை அருகிருந்தால் போதும் இச்சிறுமிக்கு சிறப்பு
தென்னை மரமேறி சுமக்கும் தன் குடும்பத்தின் பொறுப்பு
தன்னம்பிக்கையெ ன்றும் வெற்றிக்கு கை கொடுக்கும்
பாருங்கள் இரு கைகளின் இறுக்கம் வலி கொடுக்கும்
முப்பத்தைந்து மரங்கள் தினம் ஏறி முடிக்கும்
ரூபாவின் முயற்சியே நாளை சாதனையாய் இருக்கும்
பசுமையான மாநிலம் தான் கேரளம்
பசுமையான வாழ்வு நாளை இவர்கள் காணலாம்.

முருக.சண்முகம்
அய்யப்பன்தாங்கல் சென்னை-56