அப்துல் ஹமீது

,இன்று இவரின் பிறந்தநாள்
அப்துல் ஹமீது 80 மற்றும் 90 காலகட்டத்தில் ஞாயிறு கிழமைகளில் நாம் அனைவரும் கேட்டு ரசித்த ஒரு நிகழ்ச்சி தான் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து மக்கள் மனதை கவர்ந்தவர் பி.எச். அப்துல் ஹமீது.
திரையுலகில் எம்.ஜி.ஆர் – சிவாஜி மாதிரி அறிவிப்புலகில் ஹமீது – ராஜா என்றொரு ஆரோக்கியமான போட்டி ஒரு காலத்தில் நிலவியது. இந்தப் போட்டியின் மத்தியில் உங்கள் நட்பு எப்படி இருந்தது?
ஹமீது- அதை போட்டி என்று சொல்ல மாட்டேன்.
ஆரோக்கியமான நட்புதான் நிலவியது.
அவருக்கு வர வேண்டிய சந்தர்ப்பம் அவருக்கும், எனக்கு வர வேண்டிய சந்தர்ப்பம் எனக்கும் இறைவனால் கொடுக்கப்பட்டது.
அறிவிப்புப் பாணியில் பல விதமான வித்தைகளை அவர் கையாண்டார். அதில் வெற்றியும் பெற்றார்.
பகுதி நேர அறிவிப்பாளராக இருந்தாலும் குறுகிய காலத்தில் அவர் பிரபலமானார்.
அவர் இருக்கின்ற இடத்தில் சிரிப்பொலிக்கு பஞ்சமில்லை.
நானும் அவரும் சேர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக பயணம் செய்திருக்கின்றோம்.
ஒரே நாளில் காலையில் அவருடைய நிகழ்ச்சி மாலையில் என்னுடைய நிகழ்ச்சி என்றெல்லாம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றிருக்கின்றது.
என்னிலும் வயதில் மூத்தவரான அவருக்கும் எனக்குமிடையிலான நட்பு நன்றாகவே இருந்திருக்கின்றது.
அப்துல் ஹமீது ஒரு நேர்காணலில் சொன்னது.
இந்தியாவிலிருந்து வந்து உங்களை பெருமிதப்படுத்திய விமர்சனங்கள்?…..
ஹமீது- இலங்கை வானொலியில்ஒலிபரப்பாகிய ஒரு வீடு கோயிலாகிறது நாடகத்தை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தொடர்ந்து கேட்டிருக்கின்றார்.
ஒரு முறை வானொலி பேட்டிக்காக அவரை சந்தித்தபோது இலங்கை வானொலியிலிருந்து என்னை பேட்டிகாண வந்தததை விட உங்களுடைய நாடகங்களையும் வானொலியின் இதர நிகழ்ச்சிகளையும்மிகவும் விரும்பி ரசிக்கும் ரசிகன் என்ற முறையில் உங்களுக்கு பதிலளிக்க மிகந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று சொன்னது என்னை மிகவும் பூரிக்கச்செய்தது.
பிரபல நாவலாசிரியர் பாலகுமாரன் அவர்கள் ‘பெண்மணி’ என்ற இதழில் என்
ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுதை திரு. அப்துல் ஹமீது அவர்கள் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மூலம் கொள்ளை அடித்து விடுகிறார். நான் மட்டுமல்ல சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கின்றது இந்த நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்துல் ஹமீது ஒரு நேர்காணலில் சொன்னது