ஆன்மீகம்

சிறப்பான வாழ்வு தரும் சித்திரை வழிபாடு​

சிறப்பான வாழ்வு தரும் சித்திரை வழிபாடு​

சித்திரை மாதத்தில சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பார். ஆகையால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்பு வடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

இன்று தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. சித்திரை மாதம் பிறந்ததுமே தமிழகத்தில் ‘இளவேனில் காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. அக்காலம் தே, மா, பலா, வாழை போன்றவை செழித்துக் கொழிக்கும் காலமாகும்.

அந்த காலத்தில் சித்திரை முதல் நாளன்று சமையலில் வேப்பம் பூ பூச்செடியும். மாங்காய் பச்சடியும் செய்யப்பட்டிருக்கும்.

வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை.

சித்திரை முதல் தினத்தன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாசல் படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாசல்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, மெழுகி கோலமிட்டால் லட்சுமி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.

மஞ்சள், குங்குமம் ஆகிய இரண்டும் நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். சித்திரை அன்று புத்தாண்டு பஞ்சாங்கம் ஒன்று வாங்க வேண்டும். அதற்கு சந்தனம், குங்குமம், பொட்டு ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்ய வேண்டும்.
பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழ இருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

சித்திரை மாதத்தில சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பார். ஆகையால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்பு வடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கும், உறவினர் களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.

சித்திரை முதல் நாளன்று மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர் மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம் பெறும். உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

சிந்தை மகிழ்விக்கும் சித்திரை!

சித்திரை மாதப் பிறப்பை சைத்ர விஷூ புண்ணிய காலம் என்பார்கள். ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது, சித்திரை முதல் நாள்; சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை. பல்குண-சைத்ர மாதமாகிய சித்திரையை வசந்த ருது என்பார்கள்.

அற்புதமான இந்த மாதத்தின் முதல் நாளில், திறந்தவெளியில் சூரியக் கடவுளுக்கு பூஜைகள் செய்வர். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சித்திரை முதல் நாளை புனித தினமாகக் கொண்டாடுகின்றனர். பிரம்மன் உலகைப் படைத்தது சித்திரை முதல்நாளில் என்கின்றன சில ஞான நூல்கள்.

பஞ்சாங்க படனம்

டடமுந்தைய காலத்தில் தினந்தோறும், பஞ்சாங்கம் படிக்கச் செய்து கேட்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. தினமும் படிக்க முடியாவிடினும், வருடப் பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படிக்கும் இடத்துக்குப் போய், வரவிருக்கும் வருடத்தின் பலாபலன்களைக் கேட்க வேண்டும். இதை பஞ்சாங்க படனம் எனச் சொல்வார்கள். வருடப் பிறப்பன்று புதுப் பஞ்சாங்கத்தை பூஜையில் வைத்து, மாலை நேரத்தில் அதைப் படிக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு. வீட்டிலுள்ள அனைவரும் கூடி அதைக் கேட்பார்கள்.

பஞ்ச அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். தினமும் இதைப் படிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

யோகம்: ரோகங்களைப் போக்கும். திதி: நன்மையை அதிகரிக்கச் செய்யும். கரணம்: வெற்றியைத் தரும். வாரம்: ஆயுளை வளர்க்கும்.

நட்சத்திரம்: பாவத்தைப் போக்கும்.

மேலும், கசப்பும் இனிப்பும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் விதமாக, இல்லத்தில் வேப்பம்பூ பச்சடி செய்து சாப்பிடுவார்கள்.

குழைத்த மனமுமலர் கொண்டு குவிகையும்

இழைத்த அருச்சனையு மில்லேனை யாள்குவையோ

தழைத்த படையைச் சவுந்தரசா மந்தனுக்கா

அழைத்த புகழ்க் கூடல் அங்கயற்க ணாயகியே

  • அங்கயற் கண்ணிமாலை

விஷுக்கணி

பங்குனி மாதக் கடைசி நாள் இரவில், தங்க – வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள், நவரத்தினங்கள், பழ வகைகள், காய் வகைகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர்.

மறுநாள் அதிகாலையில் எழுந்ததும், அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இது ‘விஷுக் கணி’ (விஷுக் காட்சி) எனப்படுகிறது. பிறகு கண்ணாடியில் முகம் பார்ப்பார்கள். சிறியவர்கள், பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். அவர்களைப் பெரியவர்கள் ஆசிர்வதிப்பார்கள். அன்றைய தினம் வயதில் சிறியவர்களுக்கும் வீட்டுக்கு வருபவர்களுக்கும் பணம் பரிசளிக்கும் வழக்கம் உண்டு. இதை ‘விஷுக் கை நீட்டம்’ என்பர்.

சித்திரை ஏகாதசிகள்

சித்திரை மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இந்த மாதத்தின் தேய்பிறை ஏகாதசி, ‘பாப மோசனிகா ஏகாதசி’ எனப் படும். இந்த நாளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், நம் பாவங்கள் யாவும் பொசுங்கிவிடும். சாபத்தின் காரணமாக பேயாக மாறித் திரிந்த மஞ்சுகோஷை என்ற தேவமங்கை, இந்த விரதத்தைக் கடைப்பிடித்து இறையருளால் சாபம் நீங்கப் பெற்றாள்.
சித்திரை வளர்பிறையில் வருவது ‘காமதா ஏகாதசி’ எனப் படும். விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் விரதம் இது.

லலிதன் என்ற காந்தர்வன், ஒரு சாபத்தின் காரணமாக ராட்சஸ உருவை அடைந்தான். அவனது மனைவியான லலிதை, சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து, கணவனின் சாபம் நீங்குவதற்கு வழி கண்டாள்.

விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றும் விரதம் ஆதலால் காமதா ஏகாதசி என்று பெயர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button