இலக்கியம்
உலகப் புத்தக நாள் வாழ்த்துக்கள்

உலகப் புத்தக நாள் வாழ்த்துக்கள்
*
புத்தன் அமர்ந்ததால்
காட்டு மரம்
போதிமரம் ஆனது.
கவிஞன் தொடுவதால்
காகிதம்
காவியம் ஆகிறது.
*
போதிமரம்
புதிய புத்தர்களைத் தேடுகிறது
புத்தகமும்
நல்ல வாசகரைத் தேடுகிறது.
*
நல்ல புத்தகம்
ஒரு கையடக்க
போதிமரம்.
படிக்கும் வாசகரை அது புத்தராக மாற்றுகிறதோ இல்லையோ
புதியவராக மாற்றும்
அது உறுதி.
*
வாசிப்பு என்பது ஒரு பயணம்.
அந்தப் பயணங்களால் நாம் புத்தம் புது மனிதராகிறோம்.
நமக்குள்ளேயே நாமொரு
புத்தராக ஆகிறோம்.
*
உலகப்
புத்தக நாள் வாழ்த்துக்கள்.
*
பிருந்தா சாரதி
*
