மக் களிடம் நல்ல ‘மெசேஜ்’ சேர வேண்டும்’

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ‘ திருடாதே ‘ படம் பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் ஒருவனைப் பற்றிய கதை. படத்துக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக, படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசித்தனர்.
அப்போது, எம்.ஜி.ஆர்., ”லட்சக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறோம். போஸ்டர் ஒட்டுகிறோம். பத் திரிகையில் விளம்பரம் கொடுக்கிறோம். அதன் மூலம் மக்களுக்கு நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். நல்ல கருத்துக்களை சொல்லும் பெயராக இருந்தால், நாம் செலவு செய்ததற்கு பலன் உண்டு. அப்படிப்பட்ட பெயரை படத்துக்கு வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
படக் குழுவினர் பல பெயர்களை எழுதி வந்தனர். படத்துக்கு கவியரசு கண்ணதாசனோடு சேர்ந்து வசனம் எழுதியவர் மா.லட்சுமணன். அவர் இரண்டு பெயர்களை எழுதினார். அவற்றில் ‘திருடாதே’ என்ற பெயரை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தார். மற்றொரு பெயர் ‘நல்லதுக்கு காலமில்லை’. எம்.ஜி.ஆரிடம் மா.லட்சு மணன், ”படத்தின் கதைப் படி பார்த்தால் ‘திரு டாதே’யை விட, ‘நல்ல துக்கு காலமில்லை’தான் பொருத்தமான பெயர்” என்றார்.
லட்சுமணனைப் பார்த்து எம்.ஜி.ஆர். சிரித்தபடி, ”உண்மைதான்” என்று கூறி சற்று இடைவெளிவிட்டார். ‘பிறகு ஏன் ‘திருடாதே’ பெயரை தேர்ந்தெடுத்தார்? ‘ என்று எல்லோரின் மனங்களிலும் கேள்வி ஓடிக் கொண்டிருக்கும்போதே அதற்கு விளக்கம் அளித்தார்.
”படங்களுக்கு தலைப்பு வைக்கும் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். ‘நல்லதுக்கு காலமில்லை’ என்று தலைப்பு வைத்தால், எம்.ஜி.ஆரே ‘நல்லதுக்கு காலமில்லை’ என்று சொல்லி விட்டார், அப்புறம் நாம் எதுக்கு நல்லது செய்ய வேண்டும்? என மக்கள் நினைத்து விடுவார்கள். ‘திருடாதே’ என்பது அப்படி இல்லை. தப்பு பண்ணாதே என்று சொல் வதுபோல் இருக்கிறது. அதில் நல்ல ‘மெசேஜ்’ இருக்கிறது. எப்போதுமே மக் களிடம் நல்ல ‘மெசேஜ்’ சேர வேண்டும்” என்றார். எம்.ஜி.ஆரின் ஆழ மான, தீர்க்கமான சிந்தனையைக் கண்டு படக் குழுவினர் வியந்தனர்.

Chandran Veerasamy