இலக்கியம்

உலக தம்பதியர் தினம்…

இனிய தம்பதியர் தின வாழ்த்துகள்💐❤️😍

முரண்பாடுகளின் மொத்த முடிச்சுகள் அவர்கள்;

இருந்தும் எப் புள்ளியில் இருவரின் இதயமும் சங்கமித்ததுவோ?

முரண்பாடுகளின் மொத்த முடிச்சுகள் இவர்கள்…

அவன் – கனவுகளை கடந்து வாழ்வின் வியாக்கியானங்களில் வளைய வருபவன்;

அவள் – கனவுகளின் இடுக்கில் வாழ்வை தேடித் திரிபவள்;

அவன் – நிஜங்களின் இருப்பை நிகழ்வுகளில் வரைந்து செல்பவன்;

அவள் – கற்பனைக் கீற்றை பற்றி கவி வரைந்து வாழ்பவள்;

முரண்பாடுகளின் மொத்த முடிச்சுகள் இவர்கள்…

அவன் – அனுபவங்கள் வழியே வாழும் முறைமை பயிழ்பவன்;

அவள் – ஆசைகளின் விரிவில் வாழ்வின் துவக்கம் தொலைத்தவள்;

அவன் – கண்டிப்பின் கதாநாயகன்;

அவள் – கனிவின் காதலி;

முரண்பாடுகளின் மொத்த முடிச்சுகள் இவர்கள்…

அவன் – இருள் தொலைத்து நீளும் பயணங்களில் இசை மீட்பவன்;

அவள் – இலக்கியங்களின் இடைதனில் இரசனை வளர்பவள்;

அவன் – நிஜங்களின் காதலன்;

அவள் – நிலவின் காதலி;

முரண்பாடுகளின் மொத்த முடிச்சுகள் இவர்கள்;

நேசம் எனும் நீங்கா புள்ளியில் இருவரது இதயமும் சங்கமித்ததுவோ…

#மனதின்ஓசைகள்

#மஞ்சுளாயுகேஷ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button