ஆரோக்கியம்

வீட்டுல 5 கிராம்பையும், 2 பிரியாணி இலையையும் எரிங்க

வீட்டுல 5 கிராம்பையும், 2 பிரியாணி இலையையும் எரிங்க.. அப்புறம் வீட்டுல நடக்குற அதிசயத்தைப் பாருங்க

நாம் குடியிருக்கும் வீடு நல்ல வாசனையுடன் இருந்தால், அந்த வீட்டில் கெட்ட சக்திகள் நுழையாமல், நல்ல சக்தியின் ஓட்டம் அதிகம் இருக்கும் என்று கூறுவார்கள். ஒரு வீட்டில் நல்ல சக்தியின் ஆற்றல் ஓட்டம் அதிகம் இருந்தால், அந்த வீடு நல்ல செல்வ செழிப்போடு இருக்கும்.

இதனால் தான் நாம் தினமும் நம் வீட்டை நல்ல மணத்துடன் வைத்துக் கொள்ள, ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றின் புகையை தினமும் வீட்டில் காட்டி வருகிறோம்

வீட்டின் சூழலை இனிமையாகவும், அமைதியாகவும், கிருமிகளற்றதாகவும் வைத்துக் கொள்ள பல வழிகள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமான மற்றும் பழமையான ஒரு வழி தான் கிராம்பு மற்றும் பிரியாணி இலைகளை வீட்டில் எரித்து, அந்த புகையை வீடு முழுவதும் காண்பிப்பது. இதுவரை நீங்கள் கிராம்பு மற்றும் பிரியாணி இலைகளை தனித்தனியாக வீட்டில் எரிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சிலர் கேட்டிருக்கலாம், இன்னும் சிலர் அறியாமலும் இருக்கலாம். இக்கட்டுரையில் கிராம்பு மற்றும் பிரியாணி இலையை தனித்தனியாக எரிப்பதாலும், ஒன்றாக எரிப்பதாலும் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

கிராம்பை வீட்டில் எரிப்பதால் என்ன நடக்கும்? வீட்டில் கிராம்பை எடுப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக கிராம்பை வீட்டில் எரிக்கும் போது, அதிலிருந்து வெளிவரும் புகை வீட்டினுள் உள்ள காற்றினை சுத்தப்படுத்தும். இது தவிர இந்த புகையை வீட்டில் உள்ளோர் சுவாசிக்கும் போது, அது உடலுக்கு நோயெதிர்க்கும் ஆற்றலை அளிக்கும். இது தவிர கிராம்பை வீட்டில் எரிக்கும் போது, அது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை விரட்டும் மற்றும் இது தம்பதிகளுக்கு இடையே காதலையும், நல்லிணக்கத்தையும் அதிகரிக்கும்.

வீட்டில் பிரியாணி இலையை எரிப்பதால் என்ன நடக்கும்? கிராம்பைப் போலவே, பிரியாணி இலையும் மருத்துவ பண்புகளைக் கொண்டதோடு, ஆன்மீக நன்மைகளையும் கொண்டுள்ளது. அக்காலத்தில் நம் முன்னோர்கள் கொசு பிரச்சனைகளுக்கு பிரியாணி இலையை தான் வீட்டில் எரித்தார்கள். பிரியாணி இலையை வீட்டில் எரிக்கும் போது, அதிலிருந்து வெளிவரும் புகை கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளை வீட்டினுள் வராமல் தடுக்கும்.

மேலும் பிரியாணி இலையை எரிப்பதால் வெளிவரும் புகை, நரம்புகளை ரிலாக்ஸ் அடைய செய்து மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதோடு பிரியாணி இலையின் புகையை சுவாசிக்கும் போது, அது மூக்கடைப்பு மற்றும் சுவாசிப்பதில் சந்திக்கும் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். நீங்கள் தினமும் மனதையும், உடலையும் அமைதியாக வைத்துக் கொள்ள தியானம் செய்வீர்களானால், நீங்கள் தியானம் செய்யும் அறையில் பிரியாணி இலையை எரியுங்கள். இதனால் தியானத்தின் போது மனம் ரிலாக்ஸ் அடைவதோடு, அது செறிவை மேம்படுத்தவும் உதவும். கிராம்பு மற்றும் பிரியாணி இலையை ஒன்றாக எரிப்பதால் என்ன நடக்கும்? கிராம்பு மற்றும் பிரியாணி இலையை ஒன்றாக எரிக்கும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டின் அதிர்ஷ்டம், செழிப்பு, காதல் போன்ற அனைத்தும் இரண்டு மடங்கு அதிகரிக்கும். ஒருவர் வீட்டில் அடிக்கடி இந்த இரண்டையும் எரிக்கும் போது, உங்கள் வீட்டிற்கு எதிராக சதி செய்பவர்களை வீட்டில் இருந்து தள்ளி வைக்கும். மேலும் இந்த புகை வீட்டில் உள்ளோருக்கு ஒரு நல்ல மன அமைதியை அளிக்கும். முக்கியமாக கிராம்பு மற்றும் பிரியாணி இலையை ஒன்றாக எரிக்கும் போது, அதிலிருந்து வெளிவரும் புகை வீட்டை நல்ல நறுமணத்துடன் வைத்துக் கொள்ளும். ஆனால் உங்கள் வீட்டில் சுவாச பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இருந்தால், கிராம்பு மற்றும் பிரியாணி இலையை ஒன்றாக எரிக்க வேண்டாம். ஏனெனில் இவை இரண்டின் மணமும் மிகவும் கடுமையாக இருக்கும் மற்றும் சுவாச பிரச்சனையை தீவிரமாக்கிவிடும். எப்படி எரிக்க வேண்டும்? * ஒரு ட்ரேயில் 5 கிராம்பு மற்றும் 2-3 பிரியாணி இலையை வைத்து, அதில் ஒரு கற்பூரத்தை வைத்து எரிக்க வேண்டும். * பின் அந்த ட்ரேயில் இருந்து வெளிவரும் புகையை வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும். * இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்கும் போது, ஜன்னல்கள் அனைத்தையும் மூடி வைத்து, 5 நிமிடம் கழித்து திறந்து விடுங்கள். இதனால் அந்த மணமானது வீடு முழுவதும் நிரம்பியிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button