இலக்கியம்
தமிழ் எங்கள் அறிவுக்கு தோள்…

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள்…
புதுச்சேரியில் பூத்த தமிழ் புயலே
பார்போற்றும் கவியே…
உந்தன் கவிகளில் நீர் விதைத்த
ஆழ்ந்த ஊழிய தமிழ்ச் சொற்கள்
எங்கள் சிந்தையைக் கவ்விச் செல்கிறது…
வடமொழி கலப்பில்லா வார்த்தைகள்
அழுத்தத் திருத்தமான சந்தங்கள்
புரட்சிகரமான கருத்துகள்
தெள்ளுத்தமிழ் நடை ….
யாவும் எங்கள் அறிவுக்கும்
தமிழ் மொழியின் செழுமைக்கும்
தோளாய் விளங்கிடுமே…
பாருக்கே வேந்தனான
எங்கள் பாவேந்தர் பாரதிதாசனே
நீர் இப்பூலகை விட்டு விலகினாலும்
எங்கள் நெஞ்சங்களில் நீங்காமல்
நிலைத்திருக்கிறீர்
நீர் விதைத்துச் சென்ற கவிதையாய்…
மயில் கவி சுபா
