இன்று மே 1 உழைப்பாளர் தினம்
இன்று மே 1 உழைப்பாளர் தினம்
இந்தியாவின் முதன்முதலாக மே தினத்தை கொண்டாடியவர் சிந்தனை சிற்பி ம. வெ.சிங்காரவேலர் அவர்கள்.
சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி பிறந்தார். தனது பள்ளி படிப்பை முடித்து மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று வழக்குரைஞர் ஆனார். இவர் தமிழ், ஆங்கிலம் மொழிகளுடன் இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மனி ஆகிய மொழிகளும் அறிந்தவர்.
வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில் தான் சிங்காரவேலர் வீடு இருந்தது அங்கு 20 ஆயிரம் நூல்களுக்கு மேல் சேகரித்து வைத்து இருந்தார்.
சிங்காரவேலர் வசதியான குடும்பத்திலிருந்து வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் ஏழைகள் பற்றி அவரது மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.
ரஷ்யாவின் கம்யூனிச புரட்சியால் கவரப்பட்டு இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918 நிறுவனார்.
சென்னை பக்கிங்கம் கர்னாடிக் ஆலை தொடங்கப்பட்ட போது, அங்குள்ள தொழிலாளர் சங்கத்தில் முதல் தலைவராக பணியாற்றினார்.
சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர்.பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டது.
இவரே காமராஜர் தமிழக முழுவதும் தொடங்கிய மதிய உணவு திட்டத்திற்கு முன்னோடி ஆவார்.
ம. வெ. சிங்காரவேலர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
உலகம் சுழன்று கொண்டே போகிறது, கடவுளும் பிரபஞ்சமும், கல்மழை உண்டாகும் விதம்,கோழி முட்டை வந்ததும் காணாமல் போனதும்,பகுத்தறிவு என்றால் என்ன?, விஞ்ஞானத்தின் அவசியம் போன்றவை இவரின் முக்கியப் படைப்புகள்.
இந்தியாவின் முதல் முதலாக” மே தினத்தை” சிந்தனை சிற்பி ம. வெ. சிங்காரவேலர். 1923 ஆம் ஆண்டு சென்னையில் கொண்டாடியவர். இன்று நூறாண்டுகள் முடிந்து விட்டது. விவசாயிகளுக்கும் பொதுவாகவுக்கும் ஒரு கட்சி தொடங்கப்பட வேண்டும் என்றும், கட்சியின் பெயர் இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி( லேபர் கிஷான் பார்ட்டி ஆப் இந்துஸ்தான் ) என்றும் அறிவித்தார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ”சிங்காரவேலர் மாளிகை” என்னும் பெயரில் தற்போது உள்ளது.
muruga shanmugam
