கட்டுரை
தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்

உழைக்கும் கரம் ஓங்கிட
செங்குருதி சிந்தி
செங்கொடி ஏற்றிய
அந்நாள் இந்நாள்.
உழைப்பவா் வாழ்திட
உறுதி எடுத்திட்ட
பொன்னாள் இந்நாளில்
உழைப்பினை சுரண்டியே
உயா்பவரை தடுத்திட
பொங்கியே எழுவோம்.
ஏழைகள் உழைப்பினில்
ஏப்பம் விடுபவன்
கொழுப்பினை கரைத்திட
துணிந்தே எழுவோம்.
அடுப்படியில் போராடும்
அடுப்பு ஊதும் அன்னையரும்
அடிப்படை தொழிலாளிகளே மறவோம்.
கறுப்பால் களவால் கணக்கை நிரப்பாது
உழைப்பால் உணர்வால் நாட்டை
உயா்த்திடும் அனைவரும்
உத்தமரே உண்மை தொழிலாளியே.
தொழிலாளர் வாழ்க…
உழைக்கும் கரங்கள் ஓங்கட்டும்.
நாடு வளமும் நலனும் பெற்று உயரட்டும்.
உழைப்பாளர் அனைவரும்
உணா்வாலே இணைந்திடும்
தொழிலாளர் தினமதில்
உழைக்கும் மக்கள்
அனைவருக்கும்!!
தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்.
கவிதாயினி
மஞ்சுளா யுகேஷ்.
