இராம.செ. சுப்பையா நினைவு சிறுகதைப் போட்டி .2023

அன்பு நண்பர்களே வளமான வணக்கங்கள்
சென்ற ஆண்டு இலக்கிய உலகின் பாராட்டை பெற்றது – இராம.செ. சுப்பையா நினைவு சிறுகதைப் போட்டி . 60,000 ரூபாய் பரிசு தொகையை உடனடியாக கொடுத்தார் – போட்டியை தமது தந்தை பெயரில் நடத்திய எழுத்தாளர் தேவா சுப்பையா .
வெற்றி பெற்ற கதைகளை சுவடு பதிப்பகம் சலஞ்சலம் என்ற பெயரில் வெளியிட்டது . அதன் விழா சிவகங்கையில் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக தம்பி தேவா சுப்பையா ..இராம செ.சுப்பையா அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து இந்த ஆண்டும் 50,000 ரூபாய் பரிசு தொகை அளித்து சிறுகதை போட்டியை நடத்த எனது கருமாண்டி ஜங்ஷன் யூ டியூப் சேனலுக்கு பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
இதோ சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .
.சீனியர் ஜீனியர் என்று இல்லாமல் யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம்- வெளிநாட்டு தமிழர் கலந்துகொள்ள விரும்பினால் இந்திய முகவரியோடு தான் கலந்துக்கொள்ளலாம் . பரிசு பணம் அனுப்புவதில் சிக்கல். அதற்கு தான்.
சென்ற ஆண்டு கலந்துகொண்டவர்களும் கலந்துகொள்ளலாம் – இது திறமைக்கான போட்டிதான் .மற்ற விதிமுறைகள் போட்டி அறிவிப்பில் இருக்கிறது.
சக நண்பர்களுக்கு இந்த செய்தியை கடத்துங்கள் –
முகநூலில் பகிருங்கள்.
சக வாட்சப் குழுக்களுக்கு இச்செய்தியை அனுப்புங்கள்.
இந்த போட்டியின் வெற்றி உங்களின் வாழ்த்தால் வடிவமைக்கப்பட்டது.
— என்றும் அன்புடன் உங்கள் அமிர்தம் சூர்யா
