தமிழ் என்றும் அமிழ்தே – குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர்: புலவர் குறிஞ்சிப் பெருங்கவிஞர் கபிலர்

குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர்: புலவர் குறிஞ்சிப் பெருங்கவிஞர் கபிலர்
தமிழுக்கு வணக்கம்
தமிழ் என்றும் அமிழ்தே –
குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர்: புலவர் குறிஞ்சிப் பெருங்கவிஞர் கபிலர் அவர்கள்.
கூற்று: தலைமகன் பாங்கற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: மனம் வருந்தி உடல் மெலிந்து காணப்படும் தலைவனை நோக்கித் தோழன், “ உனக்கு என்ன ஆயிற்று? இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன ?” என்று கேட்கிறான். “ஒரு இளம்பெண்னின் மீது நான் கொண்ட காதலால் எனக்கு இந்த நிலை வந்தது.” என்று தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
” மால்வரை யிழிதருந் தூவெள் ளருவி
கன்முகைத்ததும்பும் பன்மலர்ச் சாரற்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்ன வென்னுரனவித் தன்றே.
பெரிய மலையினிட த்து வீழும் அருவி பாறைகளின் வெடிப்புகளில் ஒலிக்கும், பல மலரை யுடைய சாரலில் உள்ள சிற்றூரில் உள்ள குறவனுடைய பெரிய தோளையுடைய சிறிய மகளினது நீரைப் போன்ற மென்மை, தீயை ஒத்த என் வலியை கெடச்செய்தது.
( தனது வேறுபாடு கண்டு வினாவிய பாங்கனிடம் , குற மகளின் ஈர்ப்பு தமக்கு மாற்றம் தந்ததாக தலைவன் கூறியது)
