தமிழ் என்றும் அமிழ்தே/குறுந்தொகை

தமிழ் என்றும் அமிழ்தே/குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர்: புலவர் எயிற்றியனார்
தமிழ் என்றும் அமிழ்தே –
குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர்: புலவர் எயிற்றியனார்.
உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளேயிற்
அமிழ்தம் ஊறுமஞ் செவ்வாய்க் கமழகில்
ஆர நாறு மறல் போற் கூந்தற்
பேரமர் மழைக்கட் கொடிச்சி
மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே”.
( தலைவியைத் தோழி வாயிலாகப் பெற நினைந்து அத்தோழியிடம் பணிவுடைய சொற்களை கூறி நின்ற தலைவன்,தலைவிக்கும் தனக்கும் முன்னுள்ள பழக்கத்தை குறிப்பாக அறிவித்தது )
முள்ளைப் போன்ற கூறிய பற்களையும், அமிர்தம் ஊறுகின்ற அழகிய செய்ய வாயையும்,மணம் வீசுகின்ற அகில்புகையும், சந்தன புகையும், மணக்கின்ற கருமணலைப் போல கரிய கூந்தலையும் பெரிய அமர்த்த குளிர்ச்சியையுடைய கண்களையும் உடைய தலைவியின் புன்னகையோடு செருக்கின பார்வையை நினைத்துப் பார்க்கும் எண்ணம் கொண்டு மகிழ்வு உடையவன் ஆவேன் என்கிறான் தலைவன் தோழியிடம்.
