தமிழ் என்றும் அமிழ்தே -குறுந்தொகை/ புலவர் நக்கீரர்.

குறுந்தொகையின் இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் நக்கீரர்.
தமிழ் என்றும் அமிழ்தே –
கூற்று விளக்கம்: தலைவன் தலைவிமீது மிகுந்த காதலுடையவன். ஆனால், அவளோடு கூடி மகிழும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால், அவன் மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறான். அவனுடைய நண்பர்கள் அவனை இடித்துரைத்து அறிவுரை கூறுகிறார்கள். அவர்களுக்குத் தலைவனின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.
குறுந்தொகையின் இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் நக்கீரர்.
” கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்
நெஞ்சு பிணிக் கொண்ட வஞ்சி லோதிப்
பெருந்தோட் குறுமகள் சிறு மெல் லாகம்
ஒரு நாள் புணரப் புணரின்
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே”.
( தன்னை இடித் துரைத்த பாங்கனை நோக்கித் தலைவன், தலைவியினது அருமையைக் கூறியது)..

நண்பரே, நீர் வாழ்வீராக! எப்பொழுதும் என்னுடைய நெஞ்சத்தைத் தன்னிடத்திலே பிணித்து கொண்டிருந்த அழகிய கூந்தலையும் பெரிய தோளையுமுடைய இளைய தலைவியி னது சிறிய மெல்லிய மேனியை ஒருநாள் என் ஐம்புலனும் இயையும் படி அளவளாவேனாயின் அதன் பின் அரைநாளேனும் வாழ்தலை விரும்பேன்.
தலைவி, தலைவனுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்த்துமாறு அமைந்த பாடல்.
